21.William Booth (10 April 1829 – 20 August 1912)
WILLIAM BRAMWELL BOOTH
1829-1912
HIS LIFE and MINISTRY
A Very Short Biography
Founder of the Salvation Army. William Booth was born in Nottingham, England. He was converted to Christ through the efforts of a Methodist minister, and soon became interested in working with the outcasts and the poor people of Nottingham. He preached on the streets and made hundreds of hospital calls before he was 20 years of age. From 1850 to 1861 he served as a pastor in the Methodist Church, after which time he and his wife left the church and stepped out by faith in evangelistic work in East London.
It was there that he organized the East London Christian Revival Society. Out of this beginning came the Salvation Army, with its uniforms, organization, and discipline. By 1930 there were branches in 55 countries. Its main emphasis under General Booth was street preaching, personal evangelism, and practical philanthropy. More than 2,000,000 derelicts have professed faith in the Lord Jesus Christ through the work of the Salvation Army since its founding by the general.
Ruckman '66
William Booth: BORN: April 10, 1829
Nottingham, England
DIED: August 20, 1912
London, England
LIFE SPAN: 83 years, 4 months, 10 days
"GO FOR SOULS, and go for the worst!" was the constant cry of William Booth, founder of the Salvation Army. The multitudes in London's slums convinced him he had discovered his life's work and no one ever took the Gospel to the "down and outer" like he did. In 1865, Booth started with only his wife at his side...unappreciated by the established churches of his day, ridiculed and jeered by most everyone. His death 47 years later sharply contrasted as 40,000 attended his funeral service, including Queen Mary of England. His "Army" including 21,203 officers and 8,972 societies were working in 58 countries preaching the Gospel in 34 languages!
William Booth was born of Church of England parents and was "baptized" when he was two days old. His mother was a devout Christian. His father, Samuel, even though he brought in considerable income, had the misfortune to lose money. At thirteen, Booth was apprenticed to a pawnbroker, limiting his education to that of a private tutor from the Methodist Connexion Church. Thus he was deprived of the advantages of a good common school education and grew up in poverty. His work day was long, sometimes running sixteen hours a day, with very little pay. That same year his father died, accepting Christ on his death bed. This left William and his mother to struggle on in their poverty. In his teens he was already interested in social reform and longed to do something to alleviate the sufferings of the poor. He joined a civic reform movement, but found this full of corruption as well.
He had broken from the Church of England and was now attending Wesley Chapel of Nottingham. One night at 11 p.m. on a street coming home from one of the services, he was saved. This was in 1844 when he was fifteen years of age.
A commemorative table marks the spot at the chapel where Booth began to seek the Lord. Many have knelt near it. One was heard saying, "O God, do it again..."
Soon after Booth's conversion, James Caughey, a spirit-filled American evangelist, visited Nottingham and preached the Wesleyan message of sanctification with great unction and power. This preaching made a great impression on young Booth and kindled in his own heart a great desire to win souls for Christ. Timid for a while, he finally ventured to read the Bible and deliver some comments on the local street corners. Although he was jeered and scorned and bricks were thrown at him, young Booth did not get discouraged...this was just a foretaste of the battle ahead of him. At 17 he preached his first sermon and was licensed by the New Wesleyan Connexion.
One day he brought a group of poor, rugged boys from the slums into the church. Instead of being pleased, the minister was angry and Booth was told next time to bring them through the back door and seat them where they couldn't be seen. As he had feared, the Methodist Church of his day was becoming too "respectable." His long hours in the pawnshop stretched out for six years and though he often worked until 8 p.m., he would hurry to prayer meetings which would last until 10 p.m. Sometimes after this he would call on the sick and dying. It is said that he made hundreds of hospital calls before he was twenty years of age. He also did much street preaching late at night during these years. He soon became a leader in these enterprises and at seventeen he was made a local preacher by the Wesleyan Methodists.
Working with the outcast and poor of Nottingham brought increased burdens for the larger cities. Seeing London in 1849 at age twenty, he said, "What a city to save!" Sixteen years later he began to help save it.
Here in London, he was without a friend and almost broke. For three years he worked as a clerk for a pawnbroker in the day giving leisure time to working among the poor and did street preaching at night. A number of Methodist chapels opened to him for Sunday ministries but his Superintendent discouraged him from entering the regular ministry. In 1851 a controversy arose in the Wesleyan Church over the question of lay representation and a large number of ministers formed a group known as "Reformers". Those Reformers offered Booth the pastorship of one of their chapels in London and a businessman offered to support him. He accepted and in 1852 went into full-time preaching at a Methodist circuit in Spalding. Here he met Catherine Mumford, falling in love with her the third time he saw her on Good Friday, April 10. For two or three years he preached in various places with great success. Many souls were won.
Because the Reformers had an unsettled policy and organization, he and a number of others joined the "Methodist New Connexion" movement in 1854. His fame as a revivalist began to spread all over England. Hundreds professed conversion to Christ in almost every series of meetings held, while his sensational methods of preaching on the slum street corners often provoked disorder.
Catherine Mumford became his wife and an ideal co-worker on June 16, 1855 at Stockwell, New Chapel in South London. They were pressed into service immediately. As they arrived at the pier on the Island of Guernsey for their honeymoon, they found crowds of people begging them to conduct revival meetings there. The crowds were so large that the doors of the church had to be opened at 5:30 in order to allow the people to come in for the evening service. He was soon preaching in England's leading cities...Lincoln, Bristol, Bradford, Manchester, Sheffield--and thousands professed faith in Christ. Once in a space of a few months, Booth saw over 1,700 converts, an average of 23 per day. As the fourth month passed, the number rose past 2,000 and the Connexion leaders saw him as going too far too fast. His methods were "lusty American, not Victorian English," they said. How soon Wesley had been forgotten.
Their first child, William Bramwell, was born March 8, 1856. Six other children followed, all active in the work of the Army. They were Ballington (born July 28, 1859), Emma (born Jan. 8, 1860), Evangeline (born Dec. 25, 1865), Catherine, Herbert and Lucy, the youngest born in 1868.
In 1857 the Connexion cut short Booth's country-wide travels. He was given charge of one of their least-promising circuits, Brighouse, in Yorkshire. Yet pastoral work did not tie him down. He went to the local masses who needed him and initiated labor reforms and other worthwhile projects to help the residents. In 1858, the year that he became a fully ordained minister, he was given another circuit--Gateshead. Contrary to his own judgment, once more he obeyed and went, but his eyes strayed beyond the 1,000 strong congregation of Bethesda Chapel. It was the masses beyond the walls o the church that he was interested in.
The Methodist Church continually denied his request to be released from his regular circuit work as a pastor so that he could return to the field of evangelism again. Weary with the constant controversy, in July 1861 the Booths stepped out by faith doing what they felt God had called them to do. He was 32 years old. About the same time, the Booths were both led into a Christian experience following John Wesley's views and teaching on sanctification, heart purity, and holiness.
Now traveling in evangelism, he started in Cornwall, on to Cardiff, Wales and Walsall. The crowds at Hayle, Cornwall were too great to be accommodated in any building and great open-air meetings were held. The campaign stretched out to eighteen months. Fishermen rowed ten miles and villagers walked up to four miles to hear him. Booth claimed 7,000 Cornishmen became Christians. At Cardiff a tent was used. At Walsall in Staffordshire, he used many converts as testimonies of God's saving power. This 1863 visit drew 5,000 to the open-air preaching of Booth.
The beginnings of the great Salvation Army started July 2nd, 1865, as a large tent was erected on a Quaker burial ground in the Whitechapel neighborhood in East London. William Booth was now 36 years old. Another evangelist became ill and Booth was substituted. Meetings were held every night for two weeks among the poor lower classes of the London slums. At midnight upon returning home after a serious soul-searching, he said, "I have found my destiny!" This was July 5, 1865. Converts streamed to the tent the next night. Soon they were using an unused warehouse.
The work was first called the East London (Christian) Revival Society, then the East London Christian Mission, and then the Christian Mission, firmly established by 1869. Open air meetings were held from 6 to 7 p.m. with an invitation to come to the evening meeting at the tent. These meetings continued on past the scheduled allotment and after rain, howling winds and a gang of ruffians had torn the tent down twice, they finally rented a large dance hall. Up to 600 would gather on Sunday following a night of dancing by citizens of another world the preceding night. Later he held evangelistic meetings at a wool warehouse and finally at an unused theater. Sometimes some would pour gunpowder in the room and create a blinding flash by setting fire to it. Frequently mud and stones were hurled through the windows also.
Toiling on from this difficult beginning, a chain of missions was gradually formed with the power of God manifest in meeting after meeting. From now on Booth was to be found preaching wherever people would listen to him...dancing saloons, stables, sheds adjacent to pig sties, theater stages, circus rings, race course grandstands, footboards of railway carriages, ship-captain bridges and African huts! But he was foremost a specialist in open-air services and street corners. People were often stricken down in his meetings, overwhelmed with a sense of the presence and power of God.
Opposition came...it was not uncommon to see Salvationists end up with broken ankles and wrists. One had a piece bitten out of his arm--another, alone on inspection tour, was pelted and mobbed for one and a half hours. Another had lime thrown into his child's eyes. One woman convert was kicked in the womb and left to die. The first march Mr. and Mrs. Booth made to Albert Hall in Sheffield ended up in a riot. They, their officers and soldiers, arrived at the Hall wounded, bleeding and battered. Their clothes were torn and covered with filth, their band instruments smashed. This was not to be uncommon. Often every available hall or room would be denied them. Booth once wrote from Salisbury, "The evangelists have to get off the street and into houses to escape this mob. Police refuse protection. Nevertheless, there is a good society. A lot are saved. We must not give up! We will not!" Many times in his life he would be stoned, battered, shoved, cursed and almost killed. In 1889 at least 669 Salvation Army members were assaulted, including 251 women. Some were killed and many were maimed. A "Skeleton Army" of ruffians devoted themselves to disrupting Salvation Army meetings. They frequently stormed the meeting halls by the hundreds (on one occasion, 4,000), broke out windows and wrecked the inside of the buildings. Fifty buildings were wrecked. The police did little to assist Booth. Once while defending themselves 86 Army members were arrested and imprisoned on disorderly conduct charges. Booth had his own private bodyguard, Peter Monk, an Irish prize fighter and one of his converts. By 1872 he was running five "Food-for-the-Million Shops," selling cheap meals.
This militant evangelism culminated in the adoption of the title, "Salvation Army," and the reorganization of the movement along the quasi-military lines of a well disciplined army on August 7, 1878. Booth had been distressed at the lack of direction and with this new setup could really assert himself as the leader. The name developed from an incident in May, 1878. Booth was dictating a letter to his secretary, George Scott Railton (his faithful associate for 48 years), and said, "We are a volunteer army." Bramwell, his son, heard his father and said, "Volunteer, I'm no volunteer, I'm a regular!" Railton was instructed to cross out the word volunteer and substitute the word, salvation. Soon they were tagged, "Soap, Soup and Salvation Army."
The new, almost dictatorial leadership of Booth--now called "General" Booth--was dynamic. By January, 1879, he had 81 stations, 127 full-time evangelists (100 of his converts), and 75,000 services a year going. In 1880 it expanded to the United States and adopted uniforms. The same year, the first band was formed in Salisbury. A new headquarters was opened in London in 1881, as well as the work in France. In 1882 India was sent workers.
Its orders and regulations were patterned after those of the British Army. All workers assumed military titles, its trainees became "cadets," local units were designated as "Corps," places of worship became known as "Citadels" or "Outposts" and their evangelistic undertakings were called "Campaigns." The converts were organized into a carefully disciplined group. Of course the uniforms, officers, organization, regulations and discipline, plus the title "General" for Booth, attracted derision and criticism at first. Nevertheless, the "Army" was reaching people ignored by more staid church bodies! He launched a successful crusade against white slavery in 1885.
A whirlwind, eleven-week campaign was conducted in 1886 with Booth preaching from New York to Kansas City. Town after town listened spellbound as he thundered at the crowds, his long body swaying back and forth on the platform, his hair and flowing beard rumpled, his arms clasped behind his back. He spoke for 200 hours and was heard by 180,000 people. He pulled together the U.S. organization that had fragmented into three parts.
Back home in London, the sight of homeless men leaning on the rails of London Bridge prompted the beginning of heavy social work. Now the image of the Army suddenly changed as in 1887 the social service programs began to expand as General Booth fought poverty with practical philanthropy. He realized that the physical and social environment of the masses made it difficult for them to appreciate the message of the Army. He accordingly embarked upon the social work to clear the way for evangelism. These services ranged from night shelters and free breakfasts to the selection and training of prospective immigrants and their settlement overseas.
Booth's best-selling Darkest England and the Way Out was published in 1890 showing Victorian England how to deal with poverty and vice plus the need of religious and social redemption. He proposed the concentration of the nation's philanthropic funds upon the slums, hitherto largely left to the care of the local parish churches, and suggested a list of practical expedients to this end such as advocating the reclamation of unemployable persons in farm colonies.
No small credit for gain in prestige is due General Booth's wife. Catherine was a woman of charm and ability, winning the sympathy of many of the upper classes for the new movement. When she was 59 it was discovered she had cancer. General Booth had already accepted meetings in Holland, and upon hearing the news, was about to cancel. But she insisted that he go. "I'm ready to die, but many of those people over there are not." He did go for an abbreviated visit, and upon his return, found her very weak. She died October 4, 1890. The streets of London were crowded for four miles as the funeral procession went by! More than 10,000 people went to the cemetery. Added to this sorrow was the death of General Booth's daughter, Emma, in a railroad accident.
At the time of Catherine's death (after 25 years of ministry together in the work of the Army) the Salvation Army had 2,900 centers in 34 countries and was receiving 600 telegrams and 5,400 letters a week.
Another trip to America was made in 1895, and Booth found over 500 people engaged in the work of the Army. He held 340 meetings in 86 cities, speaking to 437,000 people resulting in 2,200 converts. In 24 weeks he spent 847 hours on a train. Twice, while in America, he opened the Senate with prayer. He talked to President McKinley for twenty minutes on one of his tours.
General Booth was now being praised by such diverse men as Charles Spurgeon, Winston Churchill and Cardinal Manning. The Prince of Wales became a most ardent patron, and, upon his coronation as Edward VII in 1902, Booth was officially invited to the festivities. On June 24, 1904, in a visit to Buckingham Palace, the King asked the General what his recreations were. Booth, writing in his autograph album, replied, "Sir, some men have a passion for art, fame and gold. I have a passion for souls."
Many found him dictatorial and hard to work with. Members of his own family denounced him as their leader and founded separate organizations. Gipsy Smith had left him because of his rigidity and D.L. Moody would not support him because he felt there was a threat to the local church. But no one could deny his compassion.
He was constantly telling his family, his soldiers, all England, to go and do something. He could not rest--once writing, "I am very tired, but must go on...on...I cannot stand still. I have worked today and laid down again when I could sit no longer and then got up to go on again. A fire is in my bones..." Once in South Africa, he talked for seven hours, his heart so yearning over the lost. Souls possessed him day and night, well or ill. Once his son found the old warrior pacing up and down the floor late at night. "What are you thinking about?" asked the son. "Ah, Bramwell, I'm thinking about the people's sin. What will people do with their sin?" When Booth denounced sin, people sat spellbound. They wept, hung their heads with conviction, their bosoms heaving with emotion. Conviction and conversion usually followed. As many as 3,000 at one time were known to have been moved to tears. Once in an outburst of concern for the lost, he exclaimed, "Oh, God, what can I say? Souls! Souls! Souls! My heart hungers for souls!"
Passing from one side of Great Britain to the other, General Booth made a 29-day, 1,224-mile motor tour in 1904, holding 164 meetings, gathering crowds from day to day. He visited the United States one more time in 1907. His farewell message was given on the steps of New York City Hall to 2,500 people. The year 1908 found him in Scandinavia, 1910 in Switzerland, Holland, Germany, Italy, and Denmark. On May 9, 1912, he gave his last major speech to 7,000 Salvationists at London's Albert Hall.
As his aged eyes became weak, an unsuccessful operation was performed on May 23rd. Two days later it was found that he had an infection and that he would lose his sight completely. "God knows best. I have done what I could for God and the people with my eyes. Now I must do what I can for God and the people without my eyes."
When asked for the secret of his success, William Booth said:
I will tell you the secret. God has had all there was of me. There have been men with greater brains than I, men with greater opportunities. But from the day I got the poor of London on my heart and caught a vision of all Jesus Christ could do with them, on that day I made up my mind that God would have all of William Booth there was. And if there is anything of power in the Salvation Army today, it is because God has had all the adoration of my heart, all the power of my will, and all the influence of my life.
As he died, he turned to his son Bramwell and said, "I'm leaving you a bonnie handful." As his body lay in state, 65,000 to 150,000 marched by to pay tribute to the man who not only talked, but did something for the masses. The funeral was held at a vast exhibition hall on Hammersmith Road, drawing 40,000, including Queen Mary, who sat next to an ex-prostitute, a convert of General Booth's. Traffic in London stopped for two hours as his funeral procession of 10,000 marching Salvationists went through the downtown streets.
He was succeeded by his son, Bramwell Booth. Eventually his daughter, Evangeline, became the Commander-in-Chief.
It is estimated Booth traveled 5 million miles and preached 60,000 sermons in his 60 years of ministry. This included five trips to the United States and Canada, three to Australia and South Africa, two to India, one to Japan and several to the various European countries. Sixteen thousand officers were serving in his Army.
Booth was the author of many favorite revival hymns and several books, such as Salvation Soldiers (1890) and Religion for Every Day (1902). Some of his works have gone into twenty languages. He started War Cry, the official organ of The Army, on December 26, 1879 with 17,000 copies.
Children of William and Catherine Booth
William Booth and Catherine Mumford were married on 17 June 1855 at Stockwell New Chapel, at that time part of Surrey. They had eight children:
Bramwell Booth (8 March 1856 – 16 June 1929)
Ballington Booth (28 July 1857 – 5 October 1940)
Kate Booth (18 September 1858 – 9 May 1955)
Emma Booth (8 January 1860 – 28 October 1903)
Herbert Booth (26 August 1862 – 25 September 1926)
Marie Booth (4 May 1864 – 5 January 1937)
Evangeline Booth (25 December 1865 – 17 July 1950)
Lucy Booth (28 April 1868 – 18 July 1953)
SALVATION ARMY WEBSITE|-|இரட்சணிய சேனை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
|
22.SHAHU MAHARAJ(26 June 1874 – 6 May 1922)
The Great King of Kolhapur Rajarshi Shahu Maharaj (also known as Shahu IV) (26 June 1874 – 6 May 1922) was the first Maharaja of the Indian princely state of Kolhapur between 1894 and 1922. He was also known as Rajarshi Shahuji Chhatrapati and Chhatrapati Shahuji Maharaj. An ideal ruler, progressive leader and a foresighted social reformer Born in the Ghatge family of Kagal in Kolhapur district, Shahu Maharaj was given the name Yashwantrao. After the death of Shivaji IV, the king of Kolhapur Princely State, the young child Yashwantrao was adopted by Anandibai, the King's widow, and subsequently coroneted King in 1894.
Social reform
His rule in the period 1894 to 1922, lasting 28 years, is an important chapter in the history of Maharashtra. During his reign, Shahu Maharaj gave special importance to the education of the masses and introduced several programs for them. He started separate hostels in Kolhapur for students from the Maratha, Lingayat, Panchal, Jain, Muslims, Shimpi, Devadnya, Vaishya, Dhor-Chambhar and Nabhik communities and the Miss Clark Boarding especially for the students from the untouchable (socially quarantined) communities. He offered scholarships to the needy and intelligent students from the backward castes so that they could continue their education. He made primary education compulsory and free for all in his Princely State. His royal decree held up the cause of women's education. To abolish untouchability, he stopped the cruel system followed by many institutions to hold separate schools for the upper and lower castes in 1919. He started Patil schools so that village heads could be good administrators. In times when the study of Vedic literature was considered a domain of the Brahmins (higher caste Pundits), he established Vedic schools that taught the Vedas to the masses and Sanskrit schools for the propagation of the Sanskrit language.
He vehemently opposed caste discrimination and took many steps to abolish untouchability. He introduced reservation for the untouchables in government jobs. He issued a royal decree in his Princely State to treat all humans equal and to give equal access to the untouchables to public utilities like common wells, schools, hospitals and common buildings. His commitment to abolish untouchability was such that he was even ready to give up his throne for the service of the dalit or lower class people. He legalised inter caste marriages and discontinued the hereditary tenures (Watan) of revenue collectors (Kulkarni), infamous for exploiting the masses, as also the Mahar tenures that enslaved the Mahars (a lower caste). In 1917 he legalised remarriages and widow remarriages in his Princely State. He also introduced a law banning thepractice of Devdasi (a tradition where a girl is offered to God).
Rajarshi Shahu is considered one of the leaders of the anti-Brahmin movement. He strived for giving the masses and lower class communities equal participation in political power. In 1916, he established the Deccan Rayat Association in Nipani with the objective of securing political rights for the non-Brahmins. He toured Maharashtra extensively and held public meetings to promote the cause of the anti-Brahmin movement. The struggle over the right to recite the Vedas occurred in Rajarshi Shahu's time. This struggle created a storm in the social life of Maharashtra, and gave birth to the Satyashodhak (truth finding) movement.
Rajarshi Shahu implemented a number of projects in his Princely State, like establishing the Shahu Chhatrapati Spinning and Weaving Mill, Shahupuri market, a market for jaggery, construction of the Radhanagari dam and co-operative societies for farmers. He made credit available to the farmers and backed research to modernize agriculture. To increase the yield of cash crops and the use of technology, he established the King Edward Agricultural Institute. These were his experiments in the areas of agriculture, co-operatives and industry that yielded high benefits for his subjects.
He patronized and encouraged many artists from the fields of music, cinema, fine arts and folk art. He supported and patronized a few writers and researchers too. He helped Babasaheb Ambedkar for his education and for his newspaper, the Muknayak. He provided financial aid to gymnasiums and wrestling pitches for instilling health consciousness amongst the youth and he brought prestige to the sport of wrestling. It is because of these efforts that Kolhapur is known as the Pandharpur (one of the most important pilgrimageplaces) of wrestling.
The positive effects of his work in the cultural, social, political, educational, industrial and agricultural spheres are seen all over Maharashtra. Despite being a king of the Kolhapur Princely State, he was a democratic ruler. Dr. Ambedkar appropriately described him as the 'Pillar of Social Democracy'. It's because of his seminal contribution that he was conferred the title Rajarshi by the Kurmi warrior community from Kanpur.
|
23.ஆசிரியை சாவித்திரிபாய் பூலே-03/01/1831-10/03/1897(66.Years)
“பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகி விடுகிறது. அந்த சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார். பதில் கடிதம் வருகிறது. “காலையில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பழைய சேலையைக் கட்டிக்கொள். பள்ளிக்குச் சென்றவுடன் நல்ல சேலையைக் கட்டிக்கொண்டுவிடு. மாலையில் மீண்டும் பழைய சேலையையே கட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்” இப்படிப் பதில் எழுதுகிறார் கணவர்.
கடிதம் எழுதியவர் நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே. பதில் எழுதியவர் அவரது கணவர் ஜோதிராவ் பூலே. ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காததால் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரை நடுரோட்டில் வைத்து அறைகிறார் சாவித்திரி. அதற்குப்பிறகு தான் கற்களை எறிவதும், சாணியை வீசுவதும் அடங்கியது. ஒரு பெண் கல்வி கற்றால், அவரது கணவர் உண்ணும் உணவு புழுக்களாக மாறிவிடும் என்று பயமுறுத்தி வந்த காலக்கட்டத்தில் தனது மனைவியை கல்வி கற்க வைத்ததோடு, ஆசிரியைக்கான பயிற்சியும் பெற வைத்திருக்கிறார் மகாத்மா ஜோதிராவ் பூலே. இருவரும் இணைந்து பெண்களுக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடத்தை 1848-ஆம் ஆண்டில் திறக்கிறார்கள். ஆசிரியைப் பணியைத்தானே ஏற்றுக் கொள்கிறார் சாவித்திரி. அப்போதுதான் அவருக்கு மேற்கண்ட அனுபவம் ஏற்பட்டது. சாவித்திரியோடு இணைந்து ஆசிரியைப் பணியை மேற்கொள்கிறார் பாத்திமா ஷேக் என்கிற இஸ்லாமியப் பெண். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலேதான்.
கணவருக்குத் துணையாக...! பள்ளிக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடங்கவில்லை. பூலேயின் தந்தை கோவிந்தராவை நிர்ப்பந்திக்கிறார்கள். அவரும், எதிர்ப்புக்குள்ளாகும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறுமாறு பூலேயிடம் சொல்கிறார். அந்தச் சிரமமான நிலையில், எதிர்ப்புகளைத் தாண்டி நாம் நமது பணிகளைத் தொடர வேண்டும் என்று கூறி கணவர் பூலேயை உற்சாகப்படுத்துகிறார் சாவித்திரி.
மராட்டியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நய்காவ்ன் என்ற ஊரில் விவசாயக் குடும்பமொன்றில் ஜனவரி 3, 1830 அன்று சாவித்திரி பிறந்தார். அப்போதெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்படித்தான் ஒன்பது வயதிலேயே ஜோதிராவ் பூலேவுக்கு சாவித்திரியைத் திருமணம் செய்து வைத்தனர். பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் ஜோதிராவ், தனது மனைவியைப் கல்வி கற்குமாறு ஊக்குவித்தார். இது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அப்போது சாவித்திரிக்கும் இருந்த மனோபலம் ஜோதிராவின் உறுதிக்கு வலிமை சேர்த்தது.
ஆபத்தான கட்டத்திலும் தனது உறுதியைத் தளர விடாதவராக இருந்தவர் சாவித்திரி. ஒருமுறை, அவர்கள் வீட்டிற்குள் வாடகைக் கொலைகாரர்கள் ஏறிக் குதிக்கிறார்கள். சத்தம் கேட்டு பூலேயும், சாவித்திரியும் எழுகிறார்கள். நிதானமாக வெளிச்சத்தை அதிகரிக்கும் வகையில் விளக்கை ஏற்றி வைக்கிறார் சாவித்திரி. அவரது நிதானம் ஜோதிராவ் பூலேயின் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறுதியில் கொலைகாரர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்கிறார்கள்.
முடிவெட்ட மாட்டோம்...! அவர் வாழ்ந்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கணவனை இழந்து விட்டால் உலகில் கவுரமான வாழ்க்கை இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் ஏராளம். மறுமணம் என்பதை நினைத்துப் பார்த்தாலே சமூக விரோதம் என்று முத்திரை குத்தப்படும் காலமது. 1860 ஆம் ஆண்டில் விதவைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு எதிராக ஒரு வித்தியாசமான போராட்டத்தைத் தொடுக்கிறார் சாவித்திரி. விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்ற போர்க்குரலுடன் முடிதிருத்துபவர்களை அணி திரட்டுகிறார் அவர். அவருடன் பெரும் எண்ணிக்கையில் முடி திருத்துபவர்கள் அணி திரண்டதைப் பார்த்து மிரள்கிறது ஆதிக்க சக்திகள். சமூகப் பிரச்சனைகளில் உறுதியான நிலை எடுத்த சாவித்திரி, சாமான்யனின் பொருளாதார அவலத்தையும் அம்பலப்படுத்துகிறார். “கடன்“ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், கடன் வாங்கிப் பண்டிகை கொண்டாடும் பழக்கத்தைக் கடுமையாகச் சாடுகிறார்.
இதனால் கடன் சுமை கடுமையாக ஏறிவிடுகிறது. தனிமைப்படுத்தப்பட்டு துன்பத்தில் உழல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது இப்படித்தான் இருக்கும். இதை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு துயரத்திலேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்று எழுதுகிறார். சாவித்திரியின் கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. புரோகிதர் இல்லா திருமணம் சத்யசோதக் சமாஜ் என்ற சமூக-ஆன்மீக அமைப்பொன்றை செப்டம்பர் 24, 1873 அன்று பூலே நிறுவினார். இந்து மதத்தை சீர்திருத்துவதாகச் சொன்ன பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் பிராமணியம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து பாதுகாக்கவே முயல்கின்றன என்று பூலே உறுதியாகக் கருதினார். முதல் அமைப்பு பிரம்மாவையும், இரண்டாவது பிரார்த்தனையையும் மற்றும் மூன்றாவது ஆரிய அடையாளத்தையும் முன்னிறுத்தின. பூலேயைப் பொறுத்தவரை, உண்மையில் கவனம் செலுத்தினார். இந்த அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவராக சாவித்திரி பணியாற்றினார். அந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் காலத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து வைக்கும் ஒரு புரட்சிகர முயற்சியில் சாவித்திரி இறங்கினார். டிசம்பர் 25, 1873 அன்று அந்தத் திருமணம் நடந்தது. சிறிய அளவில் எதிர்ப்பு அதற்கு இருந்தது. அதேபோன்ற திருமணம் ஒன்றை மீண்டும் செய்ய முயன்றபோது, புரோகிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பூலே சரியான சமயத்தில் தலையிட்டு காவல்துறையின் உதவி மூலம் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் என்பது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாததாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவனை இழந்ததால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிராமணப் பெண் ஒருவரைக் காப்பாற்றிய சாவித்திரி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைத் தானே தத்து எடுத்துக் கொள்கிறார். யஷ்வந்த் என்று பெயரிட்டு அந்தப் பையனை அவரே வளர்த்து எடுக்கிறார். கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பூலே தம்பதியினர் ஒரு இல்லத்தைத் திறந்து அவர்களைப் பாதுகாத்தனர். இதுவும் ஆதிக்க சக்திகளின் கடும் எதிர்ப்புக்குள்ளாகிறது. தங்கள் இல்லக் குழந்தைகளுக்குத் தானே தாயாக இருந்து வளர்க்கிறார் சாவித்திரி.
கணவரின் உடலுக்குக் கொள்ளி...! 1870களில் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. இந்தப் பஞ்சத்தில் ஏராளமான குழந்தைகள் அநாதைகளாகினர். அந்தக் குழந்தைகளுக்கு 52 உறைவிடப் பள்ளிகளைத் துவக்குவதில் பூலே தம்பதியினர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். குறிப்பாகப் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் சாவித்திரி பெரும் கவனம் செலுத்தினார். தனது கணவர் ஜோதிராவ் பூலே 1890ல் இறந்தபோது பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவரே கணவரின் உடலுக்குத் தீ மூட்டினார். இடுகாட்டிற்குப் பெண்கள் வருவதே அபூர்வம் என்ற நிலையில், கணவரின் இறுதிச்சடங்கில் மனைவியே கொள்ளி வைத்தது மகாராஷ்டிர சமூகத்தில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது. கணவரின் மறைவுக்குப் பிறகு சத்யசோதக் சமாஜத்தின் தலைமைப் பொறுப்பை சாவித்திரியே ஏற்றுக் கொண்டார். 1893 ஆம் ஆண்டில் சாஸ்வத் என்ற இடத்தில் அந்த அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சாவித்திரி 1896 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான நிவாரணப் பணிகளை அரசே முறையாக ஏற்று நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வெற்றி கண்டார். அடுத்த ஆண்டில் பெரும் கொடிய பிளேக் நோய் புனே நகரைத் தாக்கியது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற சாவித்திரியே நேரடி நிவாரண நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது அவரையும் பிளேக் நோய் தாக்கியது. மார்ச் 10, 1897 அன்று நோயின் பாதிப்பால் சாவித்திரி மரணமடைந்தார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் தாண்டிய பிறகும் பெண் குழந்தைகளின் கல்வி என்பது சமூகப் பிரச்சனையாகவே நீடிக்கிறது.
நாடு முழுவதும் நீடிக்கும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைக் பிரச்சனைகளுக்கு எதிராக உருவாகியுள்ள “தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி”, சாவித்திரிபாய் பூலேயின் பிறந்தநாளை (ஜனவரி 3) ''பெண் குழந்தைக் கல்வி தினமாக'' அனுசரிக்க அறைகூவல் விடுத்துள்ளது. அவர் ஏற்றி வைத்த புரட்சி விளக்கை அணையவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமே.
|
24.அன்னை தெரசா(26/08/1910-
அன்பென்றால்..!”அன்னை தெரசா”
ஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய குடும்பமாய் பாவித்து, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன்னுடைய இறுதி நாள் வரை ஒரு பெண் போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் என்றால் அது “அன்னை தெரசா”வை தவிர வேறு யாராக இருக்க முடியும்.
1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 தேதி, அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசாவிற்கு பெற்றோர் இட்ட பெயர் “ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ”. கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் ‘ரோஜா அரும்பு’ என்று அர்த்தமாம். தன்னுடைய பதினெட்டு வயதில் “லொரேட்டோ சகோதரிகளின் சபையில்” மறைப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டவர்,
ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவும்,எய்ட்ஸ், தொழுநோயாளிகள், காச நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை உழைத்திருக்கிறார். இந்தியாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவே இந்தியா வந்தவர், டார்ஜிலிங்கில் தன்னுடைய பணியை தொடங்கினார்.
செப்டம்பர் 10, 1946 இல் ஆண்டு, லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்த பொழுது அவருக்கு ஏதோ உள்ளுணர்வு ஏற்பட்டிருக்கிறது.அதன் பின்னர் அவர் கன்னியர் மடத்தை விட்டு, ஏழைகளோடு குடிசை பகுதியில் வாழ்ந்து வரத்தொடங்கினார். 1948-ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தவர், லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தது, இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்து வரத் தொடங்கினார்.
தொடக்கத்தில், பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை அறிந்து அவர்களது பசியினை போக்கிட எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.
தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.
எத்தனை எத்தனை இன்னல்கள் அவருக்கு வந்த போதிலும், தான் எடுத்த காரியத்தில் பின்வாங்காமல் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும்,அவர்களின் பசி போக வேண்டும் என்பதையே தன்னுடைய முழு மூச்சாய் கொண்டு தான் எதிர் கொண்ட சவால்களை எதிர்த்து வாழத் தொடங்கினார்.அதன் பின்னரே கொல்கத்தா மாநகரில் “அன்பின் பணியாளர்” என்ற சபையினை நிறுவி பலரும் ஏழை மக்களுக்காக தொண்டு செய்ய வழி வகுத்தார்.
இந்த சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, “உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்.” இந்த குறிக்கோளோடு இறுதி வரை பயணித்து வந்தார்.
கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இவர் இறந்த போது ‘அன்பின் பணியாளர் சபை’ 123 நாடுகளில் 610 சபை செயல்பட்டுக் கொண்டிருந்தது.இன்று 6000க்கும் மேலான நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் அநாதை இல்லங்கள் ,எய்ட்ஸ் நலவாழ்வு மையங்கள், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.
1970-களில் அன்னை தெரசாவின் சேவையை இந்தியா அறிந்திருந்தாலும், உலகம் முழுவதும் தெரிவதற்கு காரணமாக இருந்தது மேல்கம் முக்கெரிட்ஜ்ன் “சம்திங் பியூடிபுல் பார் காட்” என்ற ஆவணப்படம் தான்.இந்திய குடியுரிமை பெற்ற இவருக்கு, இவரது சேவைக்காக இந்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவப்படுத்தியது.1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு கொடுக்கப்பட்டது.அதற்கு பரிசாக கொடுக்கப்பட்ட தொகை முழுதையும், ஏழைகளுக்கே செலவிட வழி செய்தார்.
இவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992-ல் வெளியிடப்பட்டது.
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை, ஜாதி மத பேதமில்லை, நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவனையும் சக மனிதனாய் நினைத்து எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியதால், “ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ” என்ற அல்பேனிய பெண்ணை, இந்திய மக்கள் தங்களின் அன்பின் வெளிப்பாடாக “அன்னை தெரசா” என்று அழைக்கத் தொடங்கினார்கள். உலகமே போற்றும் அன்பின் வடிவமான “அன்னை தெரசா”.
|
25.பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) வபாத் !
பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) வபாத் !
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.
சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.
எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.
பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.
தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.
பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.
ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.
பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.
இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
‘தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது’ எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.
‘பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.
இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தவரை பார்ப்பதற்காகச் சென்ற போது, சிறப்புப் பிரிவுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என மறுத்தது மருத்துவமனை நிர்வாகம். உடனே படுக்கையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து நீண்ட நேரம் எம்மோடு உரையாடினார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.
2001 ஆம் ஆண்டிலிருந்தே அவரை நான் நெருக்கமாக அறிவேன். அவரிடம் மணிக்கணக்கில் உரையாடிய மிகச் சிலரில் நான் ஒருவன். அவரை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நேர்காணல்கள் செய்துள்ளேன்.
ஒவ்வொருமுறையும் அவரை சந்திப்பதற்காக பச்சையப்பன் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள கேண்டீனில் அமர்ந்தே பேசுவோம். கடைசியாக அவரிடம் மருத்துவமனை கேண்டீனில் அமர்ந்துதான் பேசினேன்.
இனி எங்குமே அவருடன் பேச முடியாது!
|
25.டி.எம். உமர் பாரூக் என்றறியப்பட்ட டி.எம். மணி(--05/06/1915)
டி.எம். மணி என்றொரு தலித் தலைவர்
டி.எம். உமர் பாரூக் என்றறியப்பட்ட டி.எம். மணி என்ற தலித் தலைவர் கடந்த ஜுன் மாதம் 5ஆம் தேதி நெஞ்சுவலியால் காலமானார். கும்பகோணம் திருப்பனந்தாள் வட்டாரங்களில் செயல்பட்டு வந்த ‘நீலப்புலிகள்’ இயக்கத்தின் தலைவர் அவர். சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் அமைப்புகளும் எல்லா இடங்களிலும் அந்தந்த வட்டாரச் சூழலுக்கேற்ப செயற்பட்டு வந்திருக்கின்றன. இந்தவகையில் நாம் பார்க்கத் தவறிய, பார்த்தும் உரியவிதத்தில் பொருத்திப் புரிந்துகொள்ளத் தவறிய பல்வேறு கடந்தகால அனுபவங்கள் இங்கிருக்கின்றன. ஒடுக்கப்பட்டோரின் போராட்ட மரபில் எழுச்சியும் தேக்கமும் இருந்திருக்கின்றன என்றாலும் அவற்றை அறுபடாமல் காத்து வந்தவை வட்டார அளவிலான இத்தகைய அமைப்புகளே. இந்த வட்டார ரீதியான அமைப்புகள் உள்ளூரின் குறிப்பான பிரச்சினைகளோடு நேரடித் தொடர்பு கொண்டவை. இப்போராட்டங்களைச் சூழலும் தேவையும்தான் தீர்மானிக்கின்றன. பல்வேறு வட்டாரங்களில் இதுபோன்ற அமைப்புகளே அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதன்முறையாக நவீன போராட்ட அரசியலின் வாசனையைக் கொண்டு சேர்த்தவையாக இருந்துள்ளன. தமிழகமெங்கும் இவ்வாறு நவீன அரசியல் வாய்ப்பின் கீழ் போராடிய தலைவர்களை / அமைப்புகளைக் கூறமுடியும். இத்தகைய தலை வர்களுள் ஒருவர்தான் டி.எம். மணி.
வட்டாரரீதியான அமைப்புகளின் அனுபவங் களைத் தொகுக்கக்கருதியபோது நான் சந்திக்க விரும்பிய தலைவர்களுள் முதன்மையானவர் டி.எம். மணி. நெய்வேலி சி. துரைக்கண்ணு இவரைப் பற்றித் தனிப்பட்ட பேச்சுகளில் பலமுறை குறிப்பிட்டமை இதற்கு முதற்காரணம். டி.எம். மணி மேற்கொண்ட கல்வி மேம்பாட்டுப் பணிகளையும் போராட்டங்களையும் இளவயதி லிருந்தே நேரில் பார்த்தும் பங்கெடுத்தும் வந்த அவர் அத்தருணங்களை நினைவு கூர்ந்திருந்தார். நான் டி.எம். மணியைச் சந்தித்தபோது இயக்கப் பணிகள் குறைந்து இசுலாமிய சமயத்திற்கு அவர் மாறியிருந்தார். அவருடைய இயக்கத்தினர் பலரும் பிந்தைய தலித் இயக்கங்களில் சேர்ந்துவிட்ட நிலையில் நீலப்புலிகள் இயக்கம் பெயரளவிலானதாக நிலைத்திருந்தது. ஆனால் அவர் பிற தலைவர்களைப் போலல்லாது தம் அனுபவங்களையும் கருத்துகளையும் ‘சாதி ஒழிந்தது’, ‘செந்தமிழ் நாட்டுச் சேரிகள்’ என்கிற இரண்டு நூல்களாக எழுதியிருந்தார். அதற்கான கூட்டங்களில் என்னையும் அழைத்துப் பேச வைத்தார்.
1960களின் இறுதியிலிருந்தே டி.எம். மணியின் சமூகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. கும்பகோணம் திருப்பனந்தாள், நிலவுடைமை ஆதிக்கம் நிலவிய பகுதி. சொந்தமாக நிலமின்மை, பண்ணைகளில் பாரம்பரிய கொத்தடிமை, மறுக்கப்பட்ட கல்வி போன்றவற்றில் பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது இப்பகுதிகளில் தலித்துகளின் நிலைமை மோசம். கீழத்தஞ்சை மாவட்ட இடதுசாரி இயக்கங்களின் தாக்கமும் இங்கு குறைவே. இந்த வட்டாரத்திற்கு வடக்கே தென்னாற்காடு பகுதியில் எல். இளையபெருமாள் காங்கிரஸிலிருந்து கொண்டு தலித்துகளுக்காகச் செயற்பட்டு வந்தார். இச்சூழ்நிலையில்தான் இப்பகுதியில் டி.எம். மணியின் சமூகச் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த டி.எம். மணி தொடக்க காலத்தில் காங்கிரஸ்காரர், திமுக எழுச்சி பெற்றிருந்த அக்காலத்தில் அவருக்கு அக்கட்சிமீது ஈர்ப்பு இல்லை. இதற்கான காரணத்தையும் அவரே அடிக்கடி சொல்லியதுண்டு. நாம் யாரையெல்லாம் எதிர்க்கிறோமோ அவர்களெல்லாம் அக்கட்சியிலிருக்கிறார்கள் என்பதே அவர் கூறிய காரணம். ஆனால் அவருக்கு பெரியார்மீது மரியாதை இருந்தது. இளவயதில் டைலர் மணி என்று சொன்னால் மட்டுமே அறியக்கூடிய அளவிற்கு சிறுநகரமான திருப்பனந்தாள் பிரதான வீதியில் தையல்கடையை அவர் நடத்தி வந்தார். பகலில் கடையாகவும், இரவில் பாடசாலையாகவும் அது விளங்கியது. பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு டுடோரியல் மையம் ஒன்றை ஆரம்பித்ததிலிருந்தே அவரின் பணிகள் ஆரம்பித்தன. அப்பகுதி கிராமப்புறங்களிலிருந்து படிக்க வந்தவர்கள் கூடுமிடமாக இருந்த அக்கடை, அந்த வட்டாரத்தில் சாதிப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களும் வந்து செல்லும் இடமாகவும்மாறியது. அப்பகுதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் படித்த இளைஞர்களை ஒன்றுதிரட்டி சட்டரீதியான பாதுகாப்பு முயற்சிகளில் உதவினார் மணி. விண்ணப்பம் அளித்தல், போராட்டம் நடத்துதல், உள்ளூர் அரசு எந்திரங்களோடு தொடர்ந்து பேசுதல் என்றெல்லாம் அப்பணிகள் அமைந்தன. ஒடுக்குமுறைகளை எதிர்க்க வேண்டுமென்ற முதல் தலைமுறை இளைஞர்களின் கோபமும் உந்துதலும் சமரசமின்றி வெளிப்பட்டன.
அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மையம் அப்பகுதியில் அமைந்தபோது நடத்துநர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் அதிக அளவில் தேவை எழுந்தது. உடனே இவருடைய டுடோரியல் மையத்தில் பத்தாம் வகுப்பு தேறிய தலித் இளைஞர்கள் பலரையும் இப்பணியில் சேர வழிப்படுத்தினார். இதன்படியே இப்போக்குவரத்துப் பணிமனையில் வெளிப்படையாக ஷெடியூல்ட் வகுப்பு தொழிற்சங்கம் ஒன்று உருவாகி டி.எம். மணியின் இயக்கப் பணிகளுக்குத் துணையாகச் செயற்பட்டது. நீலப்புலிகள் இயக்கம் வீச்சோடு செயற்பட்ட காலம் அது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் சிறுசிறு ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளையெல்லாம் அழைத்து பந்தநல்லூரில் இவர் பெரிய மாநாடு ஒன்றினை நடத்தியது இக்காலத்தில்தான்.
இதுபோன்ற அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களின் முதல் தலைமுறை அரசியல் அமைப்புகளாக இருப்பதால் உருவாகும் வரையறை, உள்ளூர்ப் பிரச்சினைக்குத் தரவேண்டிய நேரடி அழுத்தம் போன்றவை காரணமாக மைய நீரோட்ட அரசியல் நலன்களைப் பெறும் பேரளவு முழக்கங்களை எழுப்பும் பெரிய கட்சிகளாக மாறமுடிவதில்லை. இதனாலேயே பெரிய கட்சிகள் வட்டார அமைப்புகளைத் தேர்தல் நேரத்தில் பயன்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கின்றன. உள்ளூர் அளவிலேயே நிற்பதால் பரந்த அளவிலான அரசியல் பார்வைகளோடு இந்த அமைப்புகள் இணைவதில்லை. இவ்வாறு உருவாகும் சமரசங்களாலும் வரையறைகளாலும் நாளடைவில் இதுபோன்ற அமைப்புகள் நீர்த்துப் போய்விடுகின்றன.
சமரசம் ஆகாததால் ‘பிழைக்கத் தெரியாதவ’ரென்று குடும்பத்தினராலும் போர்க்குணம் இல்லாத ‘பழையவர்கள்’ என்று புதிய தலைமுறை கட்சிகளாலும் பழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களும் இங்குண்டு. தாங்கள் புரிந்து கொண்டதற்கேற்ப கடந்த காலங்களில் மேற்கொண்ட தியாகங்களும் புரிதல்களும் கண்டுகொள்ளப்படாததால் புதிய அமைப்புகளையும் புதிய குரல்களையும் இவர்களும் மனமுவந்து ஏற்பதில்லை.
புதிய தலைமுறை இயக்கங்களைப்போல பெரும் கூட்டத்தினையோ, ஆவேச முழக்கங்களையோ எழுப்பவில்லையென்றாலும் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் பணியாற்றியவர்கள் என்கிற முறையில் அப்பகுதி மக்களோடு நேரடித் தொடர்புடையவர்களாலும் பிரச்சனையை அனுபவரீதியாகப் புரிந்து பின்தொடர்ந்து சென்று தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தீர்வைப் பெறுபவர்களாக இருந்துள்ளனர். அந்தந்த வட்டாரத்தின் நிலவியல் மற்றும் சமூக வரைபடம் பற்றிய பட்டறிவு இயல்பாகவே வாய்த்திருப்பதால் பிரச்சினையை உரிய பின்புலத்தோடு அறிந்தவர்களாகவும் முன்பே தீர்மானிக்கப்பட்ட கொள்கை முடிவுகளைச் சார்ந்திருப்பதைக் காட்டிலும் உள்ளூர் நடைமுறைகளைச் சார்ந்து இருப்பவர்களாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. டி.எம். மணி பெரும் கல்வி அறிவு, பேச்சாற்றல் மற்றும் கோட்பாட்டு வாசிப்பு கொண்டவரல்ல. உள்ளூர்ப் பிரச்சினைக்காக ஒரு வட்டாட்சியரைப் பார்க்கப் போகிறோமென்றால் அவர் என்னவெல்லாம் பேசுவார் என்பதை முன்னமே மணி சொல்லிவிடுவார். அதேபோல்தான் அந்த வட்டாட்சியரும் பேசுவார். தலித் வகுப்பினரை அரசாங்கம் அணுகும் விதத்தை அவர் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருந்தார். உள்ளூர் அளவில் நிலப்பட்டா, மனை பட்டா, குடியிருப்பு, சுடுகாட்டுப் பாதை போன்றவற்றிற்காகத் தொடர்ந்து உள்ளூர் அரசு அலுவலகங்களுக்கும், சாதி வன்முறைகளுக்கு எதிராகக் காவல் நிலையத்திற்கும் தொடர்ச்சியாகச் சென்று தலையிட்டிருக்கிறார்கள். ஆனால் பெரிய கட்சிகளோ / தலைவர்களோ தலையிடும்போது ஒருசேரக் கிடைக்கும் கவனமும் அங்கீகாரமும் இதுபோன்ற வட்டாரத் தலைவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இம்மாதிரியான அனுபவம் ஒன்றினைத் தன்னுடைய ‘சாதி ஒழிந்தது’ நூலில் டி.எம். மணி பகிர்ந்து கொள்கிறார். அதாவது குடிதாங்கி என்ற கிராமத்தில் தலித் பிணத்தை வன்னியர்களால் மறுக்கப்பட்ட பாதை வழியே ராமதாஸ் தூக்கிச் சென்ற சம்பவமுண்டு. ஆனால் இந்த சுடுகாட்டுப் பாதைக்காக சுமார் நான்காண்டு காலம் வெவ்வேறு தருணங்களில் உள்ளூர் தலித் அமைப்புகள் போராடி வந்தன என்று கூறும் டி.எம். மணி, தலித்துகளின் போராட்டத்திற்கு கிடைக்காத கவனம், தலித் அல்லாத ஒருவரின் கடைசிநேரத் தலையீட்டால் பெரிய அளவில் கிடைத்துவிடுகிறது என்கிறார். இந்த நுட்பமான பார்வையைப் பல தளங்களுக்கும் நாம் விவரித்துப் பார்க்கமுடியும். ராமதாஸை எஸ்.சி / பி.சி ஒற்றுமையின் அரசியல் அடையாளமாகக் காட்ட பலருக்கும் இச்சம்பவம் உதவியது. நுண்அரசியல் தளத்தில் பிரச்சினைகளை அணுகிவந்த நிறப்பிரிகை இதழும்கூட இப்பொய்க்குத் துணைபோனது என்பதே அவரின் பதிவு. ராமதாஸின் வருகையைத் தூக்கிப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்திய அவ்விதழின் களஆய்வு, விழிப்புணர்வும் போர்க்குணமும் உடைய தலித் அமைப்புகளே அங்கில்லையென எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி மறுக்கிறார்.
அன்றாடத் தேவைகளுக்காகப் போராடியதைப் போலவே கிராம அமைப்பு பாரம்பரியத்தின் பெயரால் சுமத்திய பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிராக வட்டாரரீதியான தலித் அமைப்புகள் மட்டுமே போராடின. அதாவது செத்தமாடு அகற்றுதல், பறைமேளம் அடித்தல், பிணக்குழி தோண்டுதல், விழாக்காலங்களில் அடிமை ஊழியம் புரிதல் போன்றவற்றை மறுக்கும் பணிகளை இவ்வகையில் கூறமுடியும். சிவில் உரிமைகளைக் கோரிப் போராடுவதைக் காட்டிலும் இதுபோன்ற பண்பாட்டு இழிவுகளை மறுக்கும் போராட்டங்கள் சவாலானவை. டி.எம். மணி இதுபோன்ற பணிகளை முன்னெடுத்தார். இந்த ‘பாரம்பரிய உரிமைகளை’ மறுத்தவர்கள் மறுபுறமாக தலித்துகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளை ஒரு மாற்றாக முன்வைத்தனர். இது ஒரு நவீன அரசியல் மனநிலை. இதற்கான ஆதர்சம் அம்பேத்கர். இவ்வாறுதான் தொடக்ககால தலித் அமைப்புகளில் அம்பேத்கரின் படிப்பாளி அடையாளம் முதன்மை பெற்றது. தலித்துகள் படித்து வேலைக்குப் போய் சுயமரியாதை பெற வேண்டும் என்பதே அவா.
1980களில் திருப்பனந்தாள் வட்டாரத்தில் நடந்த கொலை ஒன்றையொட்டி டி.எம். மணி மேற்கொண்ட செயற்பாடுகள் முக்கியமானவை. அதாவது, வன்னியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒன்பதாம் வகுப்பு தலித் மாணவன் ஒருவன்மீது குற்றம் சாட்டப்பட்டதோடு 99 தலித்துகள்மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவர்களைக் கைது செய்யத் தேடி வந்தது. அதில் அம்மாணவன் உள்பட ஒருவரைக்கூடக் கைதுசெய்ய முடியாதவாறு இரவோடு இரவாக தலித் இளைஞர்களின் உதவியோடு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சரண் அடைய வைத்தார். அவ்வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இவ்வழக்கை இலவசமாக நடத்த முன்வந்த தஞ்சை ராமமூர்த்தி முயற்சியால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்பிரச்சனையில் தொடர்ந்து அக்கறை காட்டிவந்த எல். இளையபெருமாள் நீதிமன்றத்திற்கே வந்து தீர்ப்பைக் கேட்டார்.
முழுக்க நடைமுறை அரசியல் சார்ந்தே செயற்பட்ட இவருக்கு தலித் இலக்கியம், தலித் பண்பாடு பற்றியும் தனித்துவமான பார்வை உண்டு. கொச்சைச் சொற்களே தலித் வழக்கு என்ற தலித் இலக்கிய ஆதரவு வாதத்திற்கு மாறாக அகராதியில் அழிக்கப்பட்ட சொற்களைக்கூட உயிர்ப்போடு பேசிவாழும் தலித் சமூகத்திற்கு இழிவு மட்டும்தான் சொந்தமா என்று எழுத்தாளர் பாமாவை கேள்வி எழுப்புகிறார். அதேபோல பறை எங்களுக்கே சொந்தம் என்று கூறுவது கூட ஆதிக்கசாதிகள் ஒதுக்கித் தந்ததை வேறுபெயரில் காப்பாற்றுகிறோம் என்றே பொருளாகும் என்று விமர்சித்தார். இக்கருத்துக்கள் எல்லாமே அவர்களின் போராட்ட அனுபவத்திலிருந்து உருவானவை. இது போன்ற தனித்துவமான பார்வை இன்றைய தலித் இயக்கங்களுக்குக்கூட கிடையாது என்பதைப் பார்க்கும்போது இக்கருத்துகளின் முக்கியத்துவம் புரியும்.
பின்னாளில் அவர் இசுலாமிய சமயத்தினைத் தழுவினார். அரசியல் செயற்பாடுகள் அவரிடத்தில் தேக்கம் காணத் துவங்கியபோது தாம் நம்பிவந்த அரசியலின் தொடர்ச்சியை ஆக்கபூர்வமான முறையில் தக்கவைத்த நடைமுறையாகவே இம்மதமாற்றம் அமைந்தது எனலாம். ஆனால் இதை அவர் தனிநபர் முடிவாகவே அமைத்துக் கொண்டார் என்பது அவர் ஆதரவாளர் பலரின் வருத்தம்.
அவர் இளவயதில் அம்பேத்கர் அடையாளத்தால் ஈர்க்கப்பட்டமை தொடங்கி இயக்கப் பணிகள் வரை வரிசைக்கிரமமாகப் பெற்றுவந்த அனுபவங்களை எழுத்தாக மாற்றிய தருணமும் அதன் பின்னயிலேயே வாய்த்தது. பல்வேறு சாதிய அனுபவங்களை இசுலாமுக்கு மாறியது மூலம் துறந்ததைக் குறிப்பிடும் நூலிற்கு ‘சாதி ஒழிந்தது’ என்று பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார். அரசியல் ரீதியாக மதம்மாறிய அவர் பிந்தைய வாழ்நாளை இசுலாமிய வாழ்வாகவே அமைத்துக் கொண்டார். தானெடுத்த நிலைப்பாட்டை எதிர்கொள்ளும் நெருக்கடியும் அவருக்கிருந்தது. தலித்துகள் இசுலாமியராக மாறியதற்குப் பிந்தைய அனுபவங்களைப் பேசிய அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ நாவல் பற்றிய வருத்தத்தை மதுரை வந்திருந்தபோது என்னோடு பகிர்ந்துகொண்டார். அதையே அவர் தொடர்ந்து எழுதிவந்த வைகறை வெளிச்சம் இதழில் எழுதியிருந்ததாகவும் நினைவு. இங்கு எல்லாத் தரப்பு அனுபவங்களும் முக்கியமானவையே.
அவரைப் போன்று கடந்த காலங்களில் பணியாற்றி ஓய்ந்து போய்விட்ட பல்வேறு தலித் தலைவர்கள் இங்கிருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்கள் திரட்டப்படாமல் கிடக்கின்றன. அவர்களின் வாழ்நாள் முடிந்தபின்புதான் அவற்றைப் பற்றி உணர்ச்சி பொங்க எழுத நாமெல்லாம் காத்திருக்கிறோமோ என்னவோ?
|
27.கன்சிராம்(15/3/1934 – 09/10/2006)
கன்சிராம் (Kanshi Ram) (15 மார்ச் 1934 – 9 அக்டோபர் 2006)
இந்திய அரசியல்வாதியாகவும், சமூகத் சீர்திருத்தவாதியுமாக இருந்தவர். தலித் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசியல் ரீதியாகத் தலித்துகளை ஓன்று திரட்டப் பாடுபட்டவர். கன்சிராம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 1984 ஆம் ஆண்டு, அம்பேத்கர் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியினைத் துவங்கினார். இவருடைய வழிவந்த மாயாவதி நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார். கன்சிராம், தம்முடைய 72 ஆம் வயதில் காலமானார்.
----###----
Manyawar Shir Kanshi Ram Ji:
Founder of Bahujan Samaj Party
"I will never get married, I will never acquire any property, I will never visit my home, I will devote and dedicate the rest of my life to achieve the goals of Phule -Ambedkar movement"
These pledges remind the work of Manyawar Kanshi Ram Sahib who is remembered in the history of India as a True leader of Bahujan Samaj . The journey of Manyawar Kanshi Ram Saheb and his movement of socio-cultural revolution and economic emancipation of Bahujan Samaj started way back in 1964. Kanshi Ram, the eldest son of Mr. Hari Singh, resident of Khawas Pur village of Punjab 's Roper district, was born on 15 th March, 1934 , in a Sikh family belonging to the Ramdassia Community. He completed B.Sc. and joined as an assistant Scientist in DRDO in Kirki Pune Maharashtra in 1957 where he was exposed to the bad breath of Hindu social order i.e. atrocious caste system. In the ordinance factory, where Kanshi Ram was working, the management cancelled the holidays of Dr. Babasaheb Ambedkar Jayanti and Buddha Jayanti and instead granted Tilak Jayanti holiday and an additional holiday during Diwali festival. As a reaction to this, not the Ambedkarites from Maharashtra but a Scheduled Caste Mr. Dina Bhana, from Rajasthan, protested against the cancellation of these two holidays. Dina Bhana's protest resulted in his suspension. By this atrocious act, agitated Kanshi Ram fought the legal battle for Dina Bhana.
As a result, not only was Dina Bhana reinstated but the holidays were also restored. The unjust and casteist act on the part of management resulted in a new awakening in Kanshi Ram, as he did not properly realize the casteist divisions in his youth in Punjab . Thereafter Kanshi Ram studied the literature of Dr. Babasaheb Ambedkar, the biggest destroyer of Brahmanism after Buddha, Jyotiba Phule and Periyar. Kanshi Ram Ji read "Annihilation of Castes" three times in one night which created not only an impact on Kanshi Ram, but shaped his thinking and future course of actions. Beside Dr. Ambedkar's writings, Mr. Kanshi Ram found the path of further movement in Dr. Ambedkar's plan for political action. Manyawar Kanshi Ram Ji quit the job in 1964 and decided that he will never marry and devote his life for social transformation.
On 24 th September 1944 , at Madras , Dr. Babasaheb declared the political goal of his struggle. Dr Ambedkar said, "Understand our ultimate goal. Our ultimate goal is to become the rulers of this country. Write this goal on the walls of your houses so that you will never forget. Our struggle is not for the few jobs and concessions but we have a larger goal to achieve. That goal is to become the rulers of the land." On 4 th October, 1945 , in the Working Committee meeting of All India Scheduled Castes Federation again he elaborately stressed on the political power and said , "Politics should be the life-blood of the Scheduled Castes." Since politics of Congress party, the mouthpiece of the dominant castes was detrimental to the very existence and interests of backward class people, Babasaheb tried to form a broad - base movement of all the victims of Brahmanism.
On 18 th March, 1956 in a public meeting at Ram Leela ground, Agra , he said that the highly qualified people belonging to SCs have betrayed us. They are occupying the key posts in government and doing nothing for their poor, oppressed brothers and sisters.
It was a great loss for the movement when Dr. Babasaheb unexpectedly died on 6 th December, 1956 .
After the death of DR Ambedkar, the Republican Party of India (R P I) as visualized by Dr. Ambedkar was formed on 3 rd October, 1957 . But from 1958 the party began to split up under various leaders. The biggest set-back to the party was that, it became a party of Maharashtra and the Mahars (later converted to Buddhism after 1956) and the other sub-castes remained the supporters of Congress and others. The clash of personalities and personal political ambitions took the caravan in a reverse direction rather taking ahead.
Manyawar Kanshi Ram Ji noticed the dynamism of Dr Ambedkar's movement. He started working with Republican Party of India. After near about eight years of working with Republican Party of India, he became disillusioned with its functioning. His dream of Ambedkarite movement was completely shattered when Dadasaheb Gaikwad joined the hands with Mohan Dhariya from Congress for a petty one Lok-Sabha reserved seat and few lakh rupees. He observed that supporters of RPI were celebrating the pact of RPI and Congress where RPI got just one seat and rest of seats were given to Congress. This event was the beginning of his dissociation from Republican Party.
Manyawar Kanshi Ram Ji decided that he will develop a society which will work to spread the thoughts of Dr Ambedkar and other social reformers and will never sell themselves for a small gain. He independently started organizing the employees of Scheduled castes, Scheduled Tribes and Backward Classes mainly from Pune, Bombay , Nasik , Nagpur and Delhi .
He traveled all over the India along with his few activists to know why Caravan of Dr Ambedkar was brought back rather than taking ahead. During these days he never bothered about his health, food, transport and worked tirelessly to awaken the educated employees. Organization of employees of Backward Class and Religious Minorities, after doing a necessary preparatory work within a period of five years decided to float an organisation in 1973. As a result of it, and as per the vision of Dr. Ambedkar, Kanshi Ramji's started his first organization on 6 th December 1978 in Delhi , called as BAMCEF. Subsequently, he formed Buddhist Research Center (BRC), DS-4 and BSP.
Kanshi Ramji decided to take the Caravan of Dr Ambedkar ahead and he considers it as his responsibility to fulfill the same. Then he started working among educated employees and awakens them to work for the upliftment of the downtrodden. In this process he was successful to a large extent in awakening, realizing and transforming the expectations of Dr Ambedkar from educated class. After the necessary ground work and positive response from some employees in Poona , Nagpur , Delhi and other places Kanshi Ramji decided to launch an organization for pay-back to society. Thus, the idea of BAMCEF was conceived on 6 th December, 1973 . After ceaseless field work throughout the country for near about five years the birth of BAMCEF took place on the lawn of Boat Club in New Delhi , on 6 th December 1978 . During this time, he conducted several cadre camps, meetings, seminars in different parts of the country to awaken the employees. The basic aim of BAMCEF was to develop genuine and capable leadership among the oppressed. Basically it has been the organization aimed to build up the non-political roots for the success of Dr. Ambedkar's political vision and action. BAMCEF's typical feature was that it was an organization of the employees, by the employees but not for the welfare of the employees. The first concept given by Kanshi Ram Ji was "people who should succeed politically must have strong non-political roots"
He witnessed the failure of Ambedkarite movement in Maharashtra ,
Kanshi Ramji had realized that the people whose non-political roots were not strong were bound to fail politically. They can have their political party, but they cannot succeed politically. Therefore, in order to strengthen the non-political roots of backward class people, he began BAMCEF experiment and spent 10-11 years in organizing the educated employees of SC/ST/OBCs and Minorities, who were benefited by the policy of reservation. BAMCEF created a new missionary political conscience among the backward caste educated employees and also established a national network for further Kanshi Ram's movement.
Kanshi Ram Ji did not project himself a leader but worked silently as organizer and hence he did not mind to invite Ram Vilas Paswan, Karpoori Thakur to address 3 rd National Convention of BAMCEF which was held at Chandigarh on 14 th -18 th October 1983 .
After spending 20 yrs of his young age Kanshi Ramji realized that merely organizing employees would not be enough to fulfill the dreams of Dr Ambedkar. Unless they get power and cannot become rulers. Therefore he created another concept, i.e . 'Power will be the product of struggle'. He realized that Employees cannot do struggle hence he stared DS-4 Dalit Shoshit Samaj Sangharsh Samiti. According to him, "not that our people were not struggling. They were struggling, but not for themselves. They were not struggling for their own cause. They were and are struggling for somebody else as stooges. Because we are passing through the Chamcha Age, the era of stooges, and as stooges we are struggling."
Books
Kanshi Ram in his historical book, "THE CHAMCHA AGE", (an Era of the Stooges) published on 24 th September, 1982 , on the occasion of 50 th anniversary of the Poona -Pact, has vividly exclusively dealt with the disadvantages of the Chamcha Age.
A) Caste and Community-wise Chamchas.
1 ) The scheduled Castes - Reluctant Chamchas.
2) The Scheduled Tribes - Initiated Chamchas
3) The Other Backward Castes - aspiring Chamchas
4) The Minorities - Helpless Chamchas.
B) Party - Wise Chamchas.
C) Ignorant Chamchas.
D) Enlightened Chamchas or Ambedkarite Chamchas
E) Chamchas of the Chamchas.
F) Chamchas Abroad.
It will be apt to say that, Kanshi Ram has been the only leader who has understood the damage caused by the Poona Pact and applied the necessary measures as it was expected by Dr. Babasaheb. His only book deals with the Chamcha Age phenomenon in detail.
Kanshi Ram has been very crystal clear in understanding the Poona Pact and therefore he said, "Babasaheb Ambedkar wanted to take the downtrodden people from Dark Age to bright age. But Gandhi intervened in this process of change. Hence we entered into a different age then onwards, which I have named as the age of Chamchas-the Chamcha Age-the era of stooges".
Thus, from the day of launching D -S4, an agitational and awakening wing of BAMCEF, till the formation of Bahujan Samaj Party, on 14 th April, 1984 , Kanshi Ram conducted several experiments of social action countrywide successfully. The programmes created sufficient awareness in the Bahujan Samaj about their socio - political, economic and cultural status. Hence, D-S4 proved as a milestone preparation for the long battle of political action, social transformation and economic emancipation.
Up to 1976, Kanshi Ram, being in Pune - the center of Maharashtra witnessed the down-fall of Ambedkarite movement. In his scientific analysis of the Chamcha Age, he has focused on the fall of Ambedkarism from the first general election i.e. 1951 till 1980. By 1971 alliance between R P I and Congress, his all hopes of Ambedkarite movement dashed into dustbin. Therefore, following the advice of Dr. Ambedkar i.e. 'political power is the key to all social progress,' he felt absolutely essential for the members of all oppressed and exploited communities to prepare themselves for agitational and political action.
Most of the politicians, Researchers failed to understand the vision of Kanshi Ram Ji and hence could not understand the Role of BSP in Indian Democracy. Today in India there are 7 national political parties which are lead by so called upper caste Hindus. They control all the affairs of their parties to establish the rule of Hindu upper castes and exploit the 85% Bahujan Samaj.
Manyawar Kanshi Ram Ji refined the rules of Indian politics. He developed a concept that the unstable government at center is beneficial for Bahujan Samaj as you can derive maximum advantages to deprived sections. Therefore he used say frequently," I want Mazboor (weak) government at centre and not Majboot (strong) till we reach to the Centre". Kanshi Ram Ji articulated positively the Bahujan ideology from Buddha to Ambedkar. Kanshi Ram Ji always acknowledged the contribution of Ex-Mahars now Buddhists for supporting Dr Ambedkar in his war against Manuvadi system. He said," I have learnt two things from them one how to learn the movement I leant from Dr Ambedkar and second how not to run the movement from his followers in Maharashtra ."
Manyawar consistently led his movement for almost 38 yrs from 1965-2003 till his illness. Bahan Mayawati has taken up the unfulfilled dream of Manyawar Kanshi Ram Ji and proved to be the successor of Kanshi Ram ji's sociopolitical struggle when she became CM of UP 4 th time with an absolute majority in may 2007.
|
28. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு(கி.மு 563)
உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் என்பதும், பற்பல கற்பகாலங்களில் கணக்கற்ற புத்தர்கள் தோன்றி அறநெறியை நாட்டிச் சென்றார்கள் என்பதும், இப்போது நடைபெறுகிற இந்தக் கற்பகாலத்திலே இருபத்தைந்து புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும் அவர்களுள் கடைசியாக வந்தவர் கௌதமபுத்தர் என்பதும் பௌத்தசமயக் கொள்கைகள். இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தர் என்பதும், அவர் இப்போது துடிதலோகம் என்னும் தெய்வலோகத்திலே நாததேவர் என்னும் பெயருடன் இருக்கிறார் என்பதும் அந்த மதக் கொள்கைகளாம்.
பல புத்தர்கள் இருந்தார்கள் என்று பௌத்த சமய நூல்கள் கூறினாலும் சரித்திர நூலோர், கௌதமபுத்தரை மட்டும் சரித்திரகாலப் புத்தர் என்று கொள்கிறார்கள். கௌதமபுத்தருடைய வரலாறு தனி நூல்களாக எழுதப்பட்டுள்ளன வாகையினாலே, ஈண்டு அவரது வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறுகிறோம்.
சாக்கிய குலத்திலே கௌதம குடும்பத்தைச் சேர்ந்த சுத்தோதனர் என்னும் அரசர் கபிலவத்து என்னும் ஊரை அரசாண்டு வந்தார். கபிலவத்து இமயமலை அடிவாரத்திலே இப்போதைய நேபாள நாட்டில் இருந்தது. சுத்தோதன அரசருக்கும் அவர் மனைவியராகிய மாயாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே, அஃதாவது ஏறக்குறைய கி.மு 563இல் இந்தக் குழந்தை பிறந்ததாகச் சரித்திர நூலோர் கூறுவர். இக் குழவிக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தைதான் பிற்காலத்திலே புத்தர் பெருமானாக விளங்கியது.
சித்தார்த்தர் பெரியவனானால் துறவியாய் விடுவார் என்று நிமித்திகர் கூறியதைக் கேட்டு, அரசன் மனம் வருந்தி, அக்குழந்தைக்குத் துறவு பூணும் எண்ணம் தோன்றாமலிருக்கும் பொருட்டு அதனைச் செல்வத்திலும் சுகபோகங்களிலும் திளைத்துவரச் செய்தார். உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றாதபடி இன்ப சுகங்களைக் கொடுத்துவந்தார். குழந்தை வளர்ந்து பதினாறு வயதுள்ள குமாரனானபோது அவருக்கு விருப்பமுள்ள ஓர் அரசிளங்குமரியை மணம் செய்து வைத்தார். சித்தார்த்த குமாரனுடைய இருபத்தொன்பதாவது ஆண்டிலே அவருக்கு இராகுலன் என்னும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைக்கே, சித்தார்த்தர் துறவு கொள்வதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.
வயது முதிர்ந்த "தொண்டு" கிழவர், கடும்பிணியினால் வருந்தும் நோயாளிகள், இறந்துபட்ட உடலாகிய பிணம் முதலிய துன்பக் காட்சிகளைச் சித்தார்த்தர் காண்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவரின் தந்தையார் ஏற்பாடு செய்திருந்தும், இக் காட்சிகளை யெல்லாம் அவர் காணும்படி நேரிட்டது. மிகவும் வயது முதிர்ந்த தள்ளாத கிழவர் ஒருவரை அவர் கண்டார். பிறகு, கொடிய நோயினால் வருந்தி வாய்விட்டலறிய ஒரு நோயாளியையும், உயிர் நீங்கிப் பிணமாகக் கிடந்த ஒரு மனித உடலினையும் அவர் காண நேரிட்டது. பின்னர், துறவி ஒருவரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. துறவற வாழ்க்கை கவலையற்ற இன்ப வாழ்க்கை என்று அவர் கண்டார். மேலே கூறிய காட்சிகளை எல்லாம் காணப் பெற்ற சித்தார்த்தருக்கு, மனித வாழ்க்கை துன்பத்தில் சூழப்பட்டது என்றும், துன்ப வாழ்க்கையிலிருந்து நீங்கி நிலைத்த இன்பநெறியைக் கண்டு பிடித்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்றும் பேரவா உண்டாயிற்று. ஆகவே, அவர், அன்று நள்ளிரவிலே தம் ஒரே மகனையும், மனைவியையும், தாய் தந்தையரையும், இன்ப சுகங்களையும், அரச உரிமையையும், செல்வங்களையும், சுக போகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்றார்.
முதலில் ஆளார காலாமர் என்பவர் இடத்திலும், பிறகு, உத்தக ராமபுத்திரர் என்பவர் இடத்திலும் சீடராக அமர்ந்து அவர்கள் காட்டிய வழியில் ஒழுகினார். விரைவிலே, அவர்கள் காட்டிய நெறி மக்களை உய்விக்கும் நெறியன்றென்று கண்டு, அவர்களை விட்டு உருவேல் என்னும் இடத்திற் சென்று, உண்ணாவிரதம் பூண்டு கடுந்தபசு செய்தார். அப்போது ஐந்து துறவிகள் இவரையடுத்து இவருடன் இருந்தார்கள். உணவு கொள்ளாமல் உடலை வாட்டி ஒடுக்கிக் கடுந்தபசு செய்தமையினாலே, குருதியும் தசையும் வற்றி எலும்பும் நரம்பும் தெரியும்படி உடல் நலிந்து வலிவு இல்லாமல் மயங்கி விழுந்தார். அதன்பிறகு, அளவுக்கு மிஞ்சி உடம்பைப் பட்டினியால் வாட்டுவது தவறு என்றும், அது மெய்ஞானம் பெற வழியன்றென்றும் கண்டு அன்று முதல் சிறிதளவு உணவு கொள்ளத் துணிந்தார். இதனைக்கண்ட இவருடன் இருந்த பிக்குகள் இவரைவிட்டுப் போய்விட்டார்கள். கடைசியாகப் போதி (அரச) மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்த போது மெய்ஞ்ஞான ஒளியைக் காணப் பெற்றார். மெய்ஞ்ஞான ஒளியைக் கண்ட சித்தார்த்தர் புத்தர் ஆனார். ஞானமாகிய போதி கைவரப்பெற்று, பிறவித் துன்பத்தைக் கடந்து பிறவாமையாகிய இன்பநெறியைக் கண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.
பிறகு, புத்தர் தம்மை விட்டுச் சென்ற ஐந்து பிக்குகளைத் தேடிச்சென்று அவர்களுக்குத் தாம் கண்ட உண்மைகளைப் போதித்தார். அவர்கள் இவர்தம் உபதேசங்களைக் கேட்டு இவருக்குச் சீடர் ஆனார்கள். பிறகு, பல துறவிகள் இவருக்குச் சீடர் ஆயினர். அறுபதுபேர் சீடரானவுடன் அவர்களை ஊரெங்கும் அனுப்பித் தமது பௌத்தமதத்தைப் போதிக்கச் செய்தார். தாமும் பல இடங்களுக்குச் சென்று போதித்தார். இவரது புதிய உபதேசத்தைக் கேட்டு, வேறு மதத் துறவிகளும் கூட்டங் கூட்டமாகப் பௌத்தமதத்தில் சேர்ந்தார்கள். துறவிகள் மட்டும் அன்று; இல்லறத்தாராகிய அரசர்களும், நிலக்கிழார்களும், வணிகரும், செல்வந்தரும், பாமரமக்களும் பௌத்தமதத்தை மேற்கொண்டார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித் திரிந்து புத்தர் தமது கொள்கையைப் போதித்தார்.
துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார். பிக்கு சங்கத்தை ஏற்படுத்தினார்.
அரசர்களும், பிரபுக்களும் பிக்குகள் தங்குவதற்கு விகாரைகளையும் பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்து நிலபுலங்களைத் தானம் வழங்கினார்கள்.
இவரது முதுமைக் காலத்தில் இவருக்கு மாறாகச் சிலர் கிளம்பி இவர் உண்டாக்கிய பௌத்த மதத்தில் பிளவு உண்டாக்க முயன்றனர். ஆனால், இவர் பிளவு ஏற்படாதபடி செய்தார்.
புத்தர் பெருமான் தமது எண்பதாவது ஆண்டில் கி.மு 483 இல் ருசி நகரத்தில் நிர்வாண மோட்சம் அடைந்தார். ருசி நகரத்தார் இவர் உடலுக்கு இறுதிக் கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப்பட்டு எஞ்சிய உடம்பின் சாம்பலும் எலும்பும் எட்டுப் பகுதியாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு அவற்றின்மேல் சைத்தியாலயங்கள் கட்டப் பட்டன.
புத்தருக்கு ஆயிரக்கனக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாரிபுத்திரர், மொக்கலானார் (மௌத்தல்யானர்), மகாகாசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர், காத்யானார் முதலானவர். மகத நாட்டரசர் பிம்பசாரரும், கோசல நாட்டரசர் பசேனதி (பிரசேனஜித்) என்பவரும் இவருடைய சீடர்களாயிருந்து இவரது மதம் பரவுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள்.
புத்தர்பெருமான் உயிர் வாழ்ந்திருந்த காலத்திலே பல மதங்கள் இருந்தன. சைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மாகாவீரர் (நிகந்தநாதபுத்த) என்பவர் இவர் காலத்தில் இருந்த சைனமதத் தலைவர். மகாவீரர், வயதினால் புத்தருக்கு மூத்தவர். சைனமதத் துறவிகள் உடலை வாட்டி ஒடுக்கி உண்ணாவிரதமிருந்து கடுநோன்பு நோற்று வந்தனர். கோசாலி மக்கலி என்பவர் உண்டாக்கிய ஆசீவகமதமும் புத்தர்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலி (மக்கலி) யும் புத்தர்காலத்திலே உயிர் வாழ்ந்திருந்தவர். (ஆசீவகமதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) ஆசீவகமதத் துறவிகளும், நிகண்ட (சைன) மதத் துறவிகளும் உடையின்றி அம்மணமாகத் திரிந்தார்கள். அக்காலத்தில் இருந்த இன்னொரு முக்கியமான மதம் பிராமண மதம் எனப்படும் வைதீக மதமாகும். பிராமணர்கள் ஆடு மாடு குதிரை முதலிய மிருகங்களைக் கொன்று கொலை வேள்வி செய்து வந்ததோடு சாதிப்பிரிவையும் வளர்த்து வந்தார்கள். இன்னும் சில மதங்கள் அக்காலத்தில் இருந்தனவாயினும், குறிப்பிடத்தக்கவை சைனம், ஆசீவகம், வைதீகம் என்னும் மூன்று மதங்களாம். இந்த மூன்று மதங்களும் பௌத்தமதத்தோடு ஆதிமுதல் போரிட்டுக் கொண்டிருந்தன.
|
29.தந்தை பெரியார(17/09/1879 - 24/12/1973)
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 17, 1879
இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)
இறப்பு: டிசம்பர் 24, 1973
பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு:
ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.
ஆரம்ப வாழ்க்கை:
தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம்:
காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.
வைக்கம் போராட்டம்:
பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.
இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.
பெரியாரின் திராவிட கழகம்:
பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:
பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இறுதிகாலம்:
இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.
புனைபெயர்கள்:
இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.
இறப்பு:
‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.
பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
காலவரிசை:
1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
1898 – நாகம்மையாரை மணந்தார்.
1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.
|
30.வள்ளல் பெ.மா.மதுரைப்பிள்ளை (1858-1913)
மார்க்கண்ட மூர்த்தி - அம்மணியம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாக 1858 டிசம்பர் 26ஆம் தேதி மதுரைப்பிள்ளை பிறந்தார். தன்னுடைய ஏழாவது வயதில் கல்வியைத் தொடங்கினார். சென்னை வேப்பேரியில் எஸ்.டி.ஜி. கிறித்தவப் பள்ளியில் சேர்ந்தார். அடுத்து இரங்கூன் சென்-று செயின்ட் பாய்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்து சென்னைக்கு வந்து கிறித்தவக் கல்லூரியில் தன்னுடையப் படிப்பை மூர்த்தி அவர்கள் தன் மகன் வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், மதுரைப்பிள்ளையோ அரசாங்க வேலையைத் தேர்ந்தெடுத்தார். அன்றைய கவர்னர் ஜெனரலுக்கு (லிட்டன் பிரபு) நேரடி உதவியாள ராகவும், சுருக்கெழுத்தாளராகவும் வேலையில் சேர்ந்தார். இவர் ஆங்கிலம், பிரென்ஞ் மொழி களில் புலமை பெற்று விளங்கியதால் கவர்னர் உட்பட அனைவருடனான மதிப்பையும் நட்பையும் பெற்றார். சிறப்பாகப் பணியாற்றி வந்தார் மதுரைப்பிள்ளை. மார்க்கண்ட மூர்த்தி தன் மகன் மதுரைப்பிள்ளை அரசு அலுவலகத் தில் இருப்பதை பெருமையாகக் கருதவில்லை. தன் மகன் தன்னுடைய தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். தன் தந்தையார் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தன்னுடைய அரசாங்க வேலையைத் துறந்தார். பின்னர் ஆங்கிலேயர்களுடன் நட்பு இருந்த காரணத்தினால் வணிகத்துறையைத் தேர்ந் தெடுத்து அதில் அனுபவம் பெற விரும்பி ஏற்கனவே படித்துப் பழகி இருந்த ரங்கூனில் தங்கி தொழிலைக் கற்றுக் கொள்ள எண்ணினார்.
பர்மிய மொழியை நன்கு அறிந்திருந்த காரணத்தினால் 1878இல் மீண்டும் ரங்கூன் சென்றார். எழுத்தாளராகத் தன்னுடையப் பணியைத் தொடங்கினார். குறுகிய காலத்தில் வணிக நெளிவு, சுழிவு நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். இந்த அனுபவம் மதுரைப் பிள்ளைக்குத் தனித்துத் தொழில் செய்யும் துணிவைத்தந்தது.
வணிகர்களின் நட்பும் தகப்பனாரின் பொரு ளுதவியும் மதுரைப்பிள்ளையின் தொழிலுக்கு ஊக்கமளித்தது. இதன்படி ஏற்றுமதி இறக்கு மதித் தொழிலைத் (Stevedore and General Merchant & Contractor)தொடங்கினார். மூன்று ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்ற 23 வயது நிரம்பிய மதுரைப் பிள்ளைக்கு செல்வம் வந்துகுவிய ஆரம்பித்தது. தன் தந்தையாரின் உடல் நலம் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் 1880ஆம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் ஆரம்பமானது. மதுரைப் பிள்ளையைக் கட்டாயப்படுத்திச் சென்னைக்கு வரவழைத்து ஆதிலட்சுமி அம்மாள் அவர் களைத் திருமணம் செய்து வைத்தனர். இத்திருமணம் அன்றைய காலகட்டத்தில் பெரும் விழாவாக நடை பெற்றது. திருமணம் செய்த பின் ரங்கூன் சென்று விட்டார். அதே ஆண்டு சூலை 12ஆம் தேதி மதுரைப் பிள்ளையின் தந்தை மரணம் அடைந்தார்.
தான் வணிகத்தால் பெற்ற செல்வத்தைத் தமிழ் புலவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக் கும் வரி வழங்கினார். அதனால் மக்கள் இவரை “நன்கொடை நாயகன்’’ என்று அழைத்தனர். தானும் வளர வேண்டும் பிறரும் வளர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக மதுரைப்பிள்ளை இருந்தார். 1885இல் ரங்கூன் நகர கவுரவ நீதிபதியாகவும், 1880இல் ரங்கூன் மாநகர கமிஷ்னராகவும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் தொடர்ந்து இருந்தார். இது ரங்கூனில் உள்ள அனைத்து மக்களின் நன் மதிப்பைப் பெற்றதற்குச் சான்றாகும். 1898ஆம் ஆண்டில் அங்குள்ள டம்ரின் மருத்துவமனை அமைந்துள்ள வளாகத்தில் மதுரைப்பிள்ளை உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டிடத்தைக் கட்டி மக்களுக்கு அர்ப்பணித்தார். இவருக்கும் மீனாட்சி என்ற பெண் குழந்தை இருந்தது. மதுரைப்பிள்ளை அவர்கள் தன் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக 1890இல் உலகப் பயணம் மேற்கொண்டார். அவருடன் பரோடா மன்னர் கெய்க்வாட் அவர்களும் இணைந்து ஒரே கப்பலில் பயணித்தார். மதுரைப் பிள்ளை அவர்கள் தன் வியாபாரத்தில் செலுத்திய அதே முனைப்புடன் மக்கள் தொண்டிற்கும் சமூதாய முன்னேற்றத்திற்கும் தன்னை அர்பணித்துக் கொண்டார். 1892இல் இன்றைய நாகப்பட்டினத் தில் இந்து மனிதாபிமான சங்கத்தை ஏற்படுத் தினார். தேடிச் சென்று உதவி செய்யும் எண்ணம் கொண்டவராக இருந்த இவர் சென்னை வந்த போது ஆதிதிராவிட மக்களுக்காகத் தேனாம்பேட்டையில் கல்விச் சாலை நடத்திவந்த ஆதிதிராவிடர் தலைவர் களில் ஒருவரான ரெவரன்ட் ஜான் ரத்தினம் அவர்களை நேரில் சந்தித்துத் தாமாகவே முன் வந்து நிதி உதவியளித்தார். இப்பள்ளியில் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரைப் பிள்ளையின் தன்னலமற்ற மக்கள் தொண்டிற் காக இராவ் பகதூர் என்ற பட்டம் அன்றைய ஆங்கில அரசால் வழங்கப்பட்டது. மதுரைப் பிள்ளை 1912இல் ஒரு புதிய கப்பலை வாங்கி னார். அதற்கு மீனாட்சி என்று பெயரிட்டார். மதுரைப் பிள்ளை ஓய்வில்லாப் பணியினாலும் பயணத்தாலும் உடல் நலிவுற்றுக் கட்டாய ஓய்வு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 1913ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் விடியற் காலையில் 2.30 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணத்தை அறிந்த ரங்கூன் அரசு விடுமுறை அறிவித்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ரங்கூனில் பேரும் புகழும் பெற்ற மனிதராக வாழ்ந்து மறைந்தார்.
பரையர் சமூகத்தில் பிறந்து இமயம்போல் வாழ்ந்தும், முதன்முதலில் கப்பல் வாங்கிய முதல் தமிழனுமாக மதுரைப்பிள்ளை விளங்கினார்.
வள்ளல் மதுரைப்பிள்ளை பயணம் செய்த உலக வணிக நகரங்கள் லண்டன், ஜெனிவா, ஈடன், நேப்பிள்ஸ், பிரிசில், வெனீஸ் லிவர்பூல், ஜெர்மன், செஸ்டர், டெர்லின், கார்வெல், பிராங் போர்ட், பாவ்கெல், விசோகி, பிரமெண்ட், மெனிபிரிட்ஜ் அல்டேவினா, பென்டெர்சில், கீஸ்ட் மெண்ட், கிளாஸ்கோ, நுரம்பர்க், டணடி, பாரீஸ் நியூகாசில், பிளாரனஸ், ரிச்மாண்ட், ரோம், சதர்லாண்ட், கெய்ரோ முதலியன ஆகும்.
மதுரைப்பிள்ளையின் பேரப்பிள்ளை யான மீனாம்பாள் சிவராஜ் பின்நாளில் ஈரோடு இராமசாமிக்கு ‘தந்தை பெரியார்’ என்று பட்டமளித்து சேலம் மகளிர் மாநாட்டில் பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
|
31.மாவீரர்.ஆரிய சங்காரன்
மாவீரர்.ஆரிய சங்காரன் தந்தை சிவராஜ் அவர்களுக்குப் பிறகு குடியரசு கட்சியின் தமிழ்நாட்டு தலைவராக இருந்தவர். சமரசமற்ற அம்பேத்கரிய போராளி. அனல் பறக்கும் பேச்சாளர். பின்னி மில் தொழிலாளர்களின் தலைமையேற்று போராட்டங்களினால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு போராட்டங்களை முன்னெடுத்தவர்.
திராவிட இயக்கத்தினர் செய்யத் துணியாத பணிகளை துணிச்சலோடு முன்னெடுத்தார். பெரியார் தாலி எதிர்ப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவரின் மேடையிலேயே தனது தாலியை அறுத்தெரிந்த ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை தமது பத்திரிகையான ஆரிய சங்காரன் இதழில் விரிவாக அறிமுகப்படுத்தினார்.
திமுகவின் தாழ்த்தப்பட்டோர் விரோத நடவடிக்கைகளை கடுமையாக அம்பலப்படுத்திக்கொண்டிருந்தார். குறிப்பாக வியாசர் பாடியில் அம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்று சத்தியவாணி முத்து அம்மையார் கேட்ட போது இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் கட்டித்தர தயார் என்று கருணாநிதி அறிவித்தார், அதை சவாலக ஏற்று நாடு முழுதும் மடிப்பிச்சை ஏந்தி இரண்டு லட்ச ரூபாய் பணத்தை அரசிடம் தந்தார் சத்யவாணி முத்து அம்மையார். இதனால் தலித் மக்களிடையே கடுமையான கசப்புணர்வை திமுக சம்பாதித்துக் கொண்டது. அதிலிருந்து திமுக-வை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் ஆரிய சங்காரன்.
ஆரிய சங்காரன் என்றால் ஆரியர்களை அழிக்க வந்தவன் என்று பொருள். தன் பெயருக்கு ஏற்ப கடுமையான பரப்புரையை முன்னெடுத்துக் கொண்டிருந்தவரை கண்டு திமுக அஞ்சியது. செங்கல்பட்டில் பரப்புரை கூட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சங்காரன் இரவில் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். தலித் மக்களிடையே கடும் கொந்தளிப்பை அன்றைக்கு உருவாக்கியது. ஊடகங்களில் விபத்து என்று செய்தி வெளியானது. ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
சென்னை பெரிய மேட்டில் அவரது உடல் கிடத்தப்பட்டிருந்த அவரது வீட்டிற்கு எம்ஜியார், நெடுஞ்செழியன் மற்றும் அவர்களது முன்னணி தலைவர்கள் வந்தனர். சங்காரனின் உடல் பெரிய மேட்டிலிருந்து மூலக்கொத்தளம் இடுகாடு கொண்டு செல்லப்பட்டபோது எம்ஜியாரும் அவரது அமைச்சர்களும் கூடவே நடந்து சென்று உடலை அடக்கம் செய்தனர் என்றால் நிலைமையின் தீவிரத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.
சரி.. படுகொலை செய்யப்பட்டார் ஆரிய சங்காரன் என்றால் அதற்கு யார் மீது மக்கள் சந்தேகப்பட்டிருப்பார்கள்.. உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
|
32.சத்யவாணி முத்து அம்மையார்(15/02/1923-11/11/1999)
சத்தியவாணி முத்து (பி.: பெப்ரவரி 15, 1923 - இ. நவம்பர் 11, 1999)[1] ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான தலித் தலைவர். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.
தமிழக அரசியல் வாழ்க்கை
சத்தியவாணி முத்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார். 1953ல் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1959-1968 காலகட்டத்தில் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளாராகப் பதவி வகித்தார். “அன்னை” என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,பெரம்பூர் தொகுதியிலிருந்து 1957ல் சுயேட்சையாகவும் 1967மற்றும் 1971ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் போட்டியிட்டு மூன்றுமுறை வெற்றிபெற்றார்.[2][3][4] 1962 ல் பெரம்பூர் தொகுதியிலும் 1977 ல்உளுந்தூர்பேட்டைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.
இவர் 1967 முதல் 1969 வரை தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை அமைச்சரவையில் அரிஜன நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[7] தொடர்ந்து மு. கருணாநிதியின் அமைச்சரவையிலும் 1974 வரை அரிஜனநலத்துறை அமைச்சராக இருந்தார்.
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக்கழகம்
சத்தியவாணி முத்து, அண்ணாத்துரையின் மரணத்துக்குப்பின் தாழ்த்தப்பட்டோர் நலனில் யாரும் அக்கறை காட்டவில்லை, புதிய திமுக தலவர் கருணாநிதி பாரபட்சம் காட்டுகிறார்[8] என்ற குற்றஞ்சாட்டுடன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக விலிருந்து 1974ல் விலகினார். அவர் கூறியது,
“ ஹரிஜனங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் புதுக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அம்பேத்காருக்குப் பின் யாரும் தலித்துகளுக்காகப் முழுமனதாகப் போராடவில்லை... நாம் புதுக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சியாக அமர்ந்து தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடுவோம். அவர்கள் முடிவில்லாமல் நம்மை சுரண்டுவதையும் அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது.
”
இவர் 1974ல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் 1977ல் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தனது கட்சியை இணைத்து விட்டார்.
மத்திய அமைச்சராக
சத்தியவாணி முத்து, ஏப்ரல் 3, 1978 முதல் ஏப்ரல் 2,1984 வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். 1979ல்இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் அமைச்சரவையில் பதவி வகித்தார். இவரும் பாலா பழையனூரும் தான் முதன்முதல் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற காங்கிரசல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.
நினைவுச் சின்னங்கள்
எண்ணூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு “சத்தியவாணி முத்து நகர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்துக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.1970-களில் சென்னை,அண்ணாநகர் கிழக்குப்பகுதியில், இன்றைய காந்திநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு அருகே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதி (புதிய ஆவடி சாலை மற்றும் அண்ணாநகர் கிழக்கும் சந்திக்கும் இடம்) மணிவர்மா காலனி என்றும், அதையொட்டிய அண்ணாநகர் கிழக்குச் சாலையில் சத்தியவாணிமுத்து காலனி ( இது தி.மு.க. சார்பானது) என்றும் இரண்டு பகுதிகள் இருந்தன. அந்தக் காலனிகளை அப்புறப்படுத்திய இடத்தில்தான் இப்போது அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது.
|
|
No comments:
Post a Comment