13

1.VENMANI(25/12/1968)

வெண்மணி கிராம கொடூரம்
          இந்த உழைப்பாளர் தினம் அன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கொடூரம் இது. நம் சக மனிதர்களுக்கு நேர்ந்த வன்மையை தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!
          தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.
          அங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.
அதில் -
          ‘கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
          முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….
          யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!
          டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.
          செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.
          முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.
          கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.
          அங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.
          தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.
          குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.
          உற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!
          எரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்! எரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!
இறந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!
இறந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!
இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!
வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.
தீர்ப்பு என்ன தெரியுமா?
முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!
இன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!
இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!
44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.
இதைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.
இதற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.
‘இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’
ஆக, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.
இந்த வரலாற்றுக் களங்கம்…
நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…

2.கயர்லாஞ்சி படுகொலை
(29/09/2006)

29.9.2006-ல் நடந்த கயர்லாஞ்சி படுகொலை. மஹாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் கயர்லாஞ்சி. இந்த ஊரைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். தனக்குச் சொந்தமான நிலத்தில், வீடு கட்டிக்கொள்ள விரும்பினார் பையாலால். இதைப் பொறுக்காத ஆதிக்கச் சாதியினர் கிராமத்தின் பொதுப் பாதைக்கு வேண்டும் என்று சொல்லி, பையாலாலின் நிலத்தின் ஒரு பகுதியைப் பறித்துக்கொண்டனர். இந்த நிலப்பறிப்பை எதிர்த்ததன் தொடர்ச்சியாக, ஒன்றுதிரண்ட ஆதிக்கச் சாதியினர் பையாலாலின் மனைவி சுரேகா, பிள்ளைகளை அடித்து நிர்வாணமாக்கி, தெருக்களில் இழுத்துவந்தார்கள். ஊரின் பொதுப் பகுதிக்குக் கூட்டிவந்து, கொடூரமாகத் தாக்கி, பையாலாலின் மனைவியையும், மகள் பிரியங்காவையும் பலரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கினர் . கொடுமையின் உச்சகட்டமாக , தாயுடனும் தங்கையுடனும் பாலுறவு கொள்ளுமாறு பையாலாலின் மகன்கள் ரோஷன், சுதிர் இருவரையும் மிரட்டியவர்கள், இதை ஏற்க அவர்கள் மறுக்கவும் இருவரின் ஆண் உறுப்புகளையும் வெட்டித் தூக்கி வீசினார்கள். பின்னர், அந்த இரு பெண்களின் பெண்ணுறுப்புகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடிக் கம்புகளைச் செருகிக் குத்திக் கொன்றார்கள்.
-----------------------------------------------------------------------
கயர்லாஞ்சி: சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்
‘காலம் தாழ்த்தி கிடைக்கும் நீதி அநீதிக்கு சமமானது’ என்பார்கள். இங்கு காலம் தாழ்த்திகூட நீதி கிடைப்பதில்லை. இலாப வெறிக்காக ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களைக் கொன்று குவித்த கொலைகாரர்களைக் காப்பாற்றி, நீதியை மறுத்து மீண்டுமொரு படுகொலையை போபால் மக்கள் மீது அரங்கேற்றிய நீதிமன்றத் தீர்ப்பைப் போலவே இன்னொன்றும் வந்திருக்கிறது. தலித் குடும்பமொன்றை ஊர் மையப்பகுதியில் நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி அதன் பின்பு படுகொலை செய்த சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுடன் கைகுலுக்கி, இனிவரும் காலங்களில் ஆதிக்க சாதியினர் எவரும் தலித் மக்கள்மீது இது போன்ற கொடூரங்களை நிகழ்த்திக் கொள்ள ‘லைசன்ஸ்’ வழங்கியிருக்கிறது கயர்லாஞ்சி தீர்ப்பு. மதக் கோட்பாடுகளைக் கொண்டு சாதிவெறியை நிலைநாட்ட வன்முறையை கையிலெடுப்பவர்களுக்கும் சரி, வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சரி, அதுதான் விதி என்று கூறும் இந்து சமூகக் கட்டமைப்பை இடித்துத் தரைமட்டமாக்க பௌத்த மதம் தழுவி, சாதி ஒழிப்பிற்கு போராடிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா மண் இன்று தலித் மக்களின் இரத்தத்தால் நனைக்கப்பட்டு வருகிறது. பந்தாரா மாவட்டம் - கயர்லாஞ்சி கிராமத்தில் அம்பேத்கரின் கருத்தை ஏற்று பௌத்த மதம் தழுவி, ஓரவிற்குத் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கும், சுயமரியாதையுடனும் வாழ்ந்து வந்த குடும்பம்தான் பய்யலால் போட்மாங்கே குடும்பம். பய்யலாலின் மனைவி பெயர் சுரேகா (வயது 44). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் - பிறவியிலேயே கண் பார்வையற்ற ரோஷன் (23), சுதிர் (21) ஆகிய இரண்டு மகன்களும், பிரியங்கா (18) என்ற ஒரு மகளும் - இருந்தனர். அந்த ஊரிலேயே அதிகம் படித்த குடும்பம். மேலும், ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். தாழ்த்தப்பட்டவன் அடிமைத் தொழில் பார்க்க வேண்டும் என்ற மனுஸ்மிருதி சட்டத்தில் இயங்கும் இந்து மதத்தை விட்டு வெளியே வந்தது மட்டுமில்லாமல் சுயமரியாதையோடு வாழ விரும்பியதுதான் அக்குடும்பம் செய்த மிகப்பெரிய தவறு. இவைதான் அவர்கள் மீது சாதி வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டதற்கு அடிப்படை காரணங்கள். வண்டி செல்வதற்கான சாலை என்று சொல்லி ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலத்தை அவர்களிடமிருந்து பிடுங்கிய ‘குன்பி’ என்ற ஆதிக்க சாதியினர் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் வெட்ட வேண்டும் என்று மீண்டும் நிலப்பறிப்பில் ஈடுபட்டனர். விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிகையில்தான் தாம் இருக்கிறோம் என்றாலும், ஆதிக்க சாதியினரின் அரக்கக் கரங்களைத் துணிவோடு எதிர்த்தார் சுரேகா. இந்நிகழ்விற்குப் பிறகுதான் சாதிவெறித் தீயால் தலித் மக்களைக் கொளுத்த சாதி வெறியர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தனர். இதற்கிடையில் கூலித் தகராறில் தலித் மக்களுக்கு ஆதரவாய் நின்ற சித்தார்த் (சுரேகாவின் உறவினர்) சாதி வெறியர்களால் தாக்கப்படுகிறார். இச்சம்பவத்தை காவல்துறையில் புகார் செய்தனர். பெண்கள் சுடுகாட்டிற்கு கூட பயமில்லாமல் செல்வார்கள், ஆனால் காவல் நிலையம் செல்ல பயப்படுவார்கள் என்ற மரபு இருந்த போதிலும், ‘சாதி வெறியர்கள்தான் சித்தார்த்தைத் தாக்கினர், இதற்கு நான் சாட்சி’ என நெஞ்சுரத்துடன் கூறினார் சுரேகா. இதனால் காவல்துறை சித்தார்த்தைத் தாக்கிய 12 பேரைக் கைது செய்து அன்றே பிணையில் விட்டது. கட்டவிழ்த்து விடப்பட்ட சாதி வெறி: ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் சாதித்தீக்கு எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்த இச்சம்பவத்தால் ஆவேசமடைந்த ஆதிக்க சாதி வெறியர்கள் 50 பேர் கொண்ட கும்பல் பய்யலால் வீட்டிற்குச் சென்றது. அங்கு, பய்யலாலும், சித்தார்த்தும் இல்லை. அங்கிருந்த சுரேகா, சுதிர், ரோஷன், பிரியங்கா ஆகிய நால்வரையும் தரையில் போட்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு ஊரின் மையப்பகுதிக்கு வந்தனர். தாங்கள் அரங்கேற்றும் சாதிவெறிக்கு ஆதரவாயிருந்த அவ்வூர் பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் நால்வரும் நிர்வாணமாக்கபட்டனர். தாயை மகனோடும், தமையனைத் தங்கையோடும் புணரச் சொல்லி அவர்களுக்கு நரக வேதனை அளிக்கப்பட்டது. அவர்கள் மறுக்கவே ஆணுறுப்புகள் வெட்டப்பட்டன. மேலும் அக்கும்பல் ஒருவர் விடாமல் தாய் மற்றும் மகளை வன்புணர்ச்சி செய்தனர். இதோடு நிற்கவில்லை சாதிவெறி. நால்வரும் தரைக்கும் வானுக்குமாய் சாகும் வரை தூக்கி எறியப்பட்டனர். பிரியங்காவின் பெண்ணுறுப்பில் தொரட்டியும், கம்பிகளும் குத்தப்பட்டு நிலை நாட்டப்பட்டது சாதிவெறி. இக்கொடுமைகளைத் தடுக்கச் சென்ற பய்யாலாலை தலித் மக்கள் தடுத்து அவரை மறைவிடத்தில் இருக்க செய்தனர். அத்தனை கொடுமைகளும் பய்யாலாலின் கண்ணெதிரிலேயே நடந்தன. இந்த நீதிமன்றம் சாதிவெறியர்களுக்குக் கொடுக்க மறுத்த மரணதண்டனையை விட கொடுமையான தண்டனையை தன் மனைவியும், மகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் போது பய்யாலால் அனுபவித்துவிட்டார். இத்தனை கொடுமைகளும் நடந்தேறி, பிணமாய், சதைப் பிண்டமாய் கிடந்த தாய் மற்றும் மகளை அந்த சாதி வெறியர்களின் ஊர்த் தலைவன் பாலியல் வல்லுறவு செய்தான். நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? இல்லை இலங்கையில் ஈழத் தமிழர்களாக இருக்கிறோமா என்று புரியவில்லை. காக்கிக்குள் சாதிவெறி: காவல்துறை, பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவத் துறை, நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் ஓட்டுக்கட்சிகள் இருக்கின்றனவா என்றால் இருக்கின்றன. ஆனால் எவையும் தலித் மக்களுக்கு இல்லை. 50 பேர் கொண்ட கும்பல் தங்கள் வீட்டை நோக்கி வரும் போதே பிரியங்கா சித்தார்த்திற்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே சித்தார்த்தும், காவல் துறையிடம் புகார் செய்துள்ளார். இருந்தும் அவர்கள் கொல்லப்பட்டு, மாட்டு வண்டியில் ஏற்றிக் கண்மாயில் வீசும் வரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, எல்லாம் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் காவல்துறையினர் வந்துள்ளனர். முதலில் வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியவில்லை. பின்பு, பெண்களும், பொதுமக்களும் நடத்திய போராட்டங்களே அவ்வாறு பதிய நிர்பந்தப்படுத்தியது. அன்றாட நிகழ்வுகளாய் வன்கொடுமைகள்: கயர்லாஞ்சி படுகொலையும், பாலியல் வன்புணர்ச்சிகளும் தலித் மக்களுடைய வரலாற்றில் ஏதோ முதல் நிகழ்வு அல்ல. 32,841 தலித் படுகொலைகளில் இதுவும் ஒன்று, 19,348 பாலியல் வன்புணர்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று தேசிய குற்றவியல் பதிவேடுகள் துறை (National Crime Record Bureau) கூறுகிறது. இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையே அச்செயல்களில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் கணவனின் கண் முன்னாலேயே பத்மினி என்ற தலித் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கயர்லாஞ்சி சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மராத்துவாடாவில் உள்ள ஔரங்காபாத்திலிருந்து 40 கி.மீ. தூரமுள்ள சஞ்ஜார்டி என்ற கிராமத்தில் காவல்துறையினர் ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்துவிட்டு, அவரையும் அவரது கணவனையும், எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இது போன்ற செயல்களைச் செய்யத்தான் காவல் நிலையங்கள் வைக்கப்பட்டுள்ளன போல. ஒவ்வொரு வருடமும் 30,000 வன்முறைகள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்றன என்று காவல்துறையினரின் பதிவேடுகள் சொல்கின்றன. இப்போதுதான் தெரிகிறது இந்திய காவல்துறையினருக்கு இரண்டாவது இடத்தை எதை வைத்துக் கொடுத்தார்கள் என்று. காவல்துறை இப்படியென்றால் நீதித்துறை என்பது சாதி வெறி கொண்ட பார்ப்பனிய செங்கற்களால் தான் கட்டப்பட்டிருக்கிறது. நீதிப் படுகொலை: சம்பவத்திற்குப் பின்னால் ஆதிக்க சாதியினர் 47 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனால், இறுதியாக சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில் 36 பேரை விட்டுவிட்டு, 11 பேர் மீது மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. 2008 - செப்டம்பர் 15 இல் பந்தாரா அமர்வு நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் சக்ரு மஹகு பிஞ்சேவர், சத்ருகன் இஸ்ஸாம் தண்டே, விஸ்வநாத் ஹக்ரு தண்டே, ராமு மங்ரு தண்டே, ஜெகதீஷ் ரத்தன் மண்ட்லேக்கா, பிரபாகர் ஜஸ்வந்த் மண்ட்லேக்கா ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிசுபால் விஸ்வநாத் மற்றும் கோபால் சக்ரு பிஞ்சேவர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. மீதியுள்ள மூன்று பேர் போதிய சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். பாலியல் படுகொலை செய்த அத்தனை பேருக்கும் தூக்கு இல்லையென்றாலும் ஆறு பேருக்காவது தூக்கு தண்டனை வழங்கப்பட்டதால், சாதிவெறியைப் பிரயோகிக்க ஆதிக்க சாதியினர் அஞ்சுவர் என நினைத்தோம். அந்த நினைப்பிலும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை மண்ணை வாறிப் போட்டது. 2010, ஜூலை 14 இல் வெளிவந்த அந்தத் தீர்ப்பில் இப்பிரச்சனை வெறும் ‘நிலப் பிரச்சனை’ என்றும், ‘பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை’ என்றும், எனவே அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாயாது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், கீழ் நீதிமன்றத்தில் 6 பேருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையும், 2 பேருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையும் குறைக்கப்பட்டு, 8 பேருக்கும் 25 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறாக, ஏ.பி.லாவாண்டே மற்றும் ஆர்.சி.சௌகன் என்ற நீ(சா)தியரசர்கள் இறுமாப்புடன் தீர்ப்பளித்து, மனுஸ்மிருதிக்கு மறுவடிவம் கொடுத்துள்ளனர். சாதி வெறிக்கு எதிராய் சமநீதியினை வழங்காத காவல் துறையும், நீதித்துறையும் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் தலித் மக்களைத்தான் கைது செய்கிறது, சிறையிலடைக்கிறது. உண்மையை மறைத்த ஊடகங்களும் சாதியத்தைக் காத்த மருத்துவரும்: கயர்லாஞ்சி படுகொலை நடந்த ஒரு மாதம் வரை செய்தி வெளிவரவில்லை. விதர்பா ஜான் அந்தோலன் சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த ஹிஷோர் திவாரி என்பவர் உண்மை அறியும் குழு அறிக்கையை அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பினார். இதுவும் கூட பத்திரிகையில் வெளிவராமல் மறைக்கப்பட்டது. பெண்கள் அமைப்புகள், பொதுமக்கள் போன்றோர் நடத்திய சட்டமன்ற முற்றுகை, செய்தித்தாட்கள் எரிப்பு, டெக்கான் குயின் இரயில் எரிப்பு போன்ற தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாகத்தான் செய்தி வெளியே வந்தது. நடிகை அசின் சினிமா படப்பிடிப்பின் போது நகம் பிய்ந்து விட்டதால் இரத்தம் கொட்டியது என்ற செய்தி அரைப் பக்கத்திற்கு போடுகின்றனர். கிரிக்கெட் வீரர் ‘தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தை ஒரு முழுப் பக்கத்திற்கு விளம்பரப்படுத்துகின்றனர். நடிகையின் நகத்திற்கும், கிரிக்கெட் வீரனின் புத்தகத்திற்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இச்சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் தலித் மக்களின் உயிருக்கு கொடுக்கப்படுவதில்லை. இதுதான் நான்காவது (சாதி வெறித்) தூணின் பத்திரிகை தர்மம். படுகொலை செய்யப்பட்ட உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள் ‘பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படவில்லை’ என்ற பச்சைப் பொய்யைத்தான் அறிக்கையில் கூறினார். மக்களைக் காக்கும் மருத்துவத்தைக் கற்று தன் உயிரையும் கொடுத்து கியூபப் புரட்சிக்குப் போராடி, உயிர் நீத்தாரே சே குவேரா அவர் மருத்துவரா? சாதி வெறியர்களைக் காத்த இந்த கேடு கெட்டவன் மருத்துவனா? ஓட்டுப் போடும் அடிமைகளா? விலங்கை உடைக்கும் மனிதர்களா? தலித் மக்களின் ஓட்டை மட்டும் வாங்க சேரி வரும் எந்த ஒரு ஓட்டுக் கட்சியாவது இப்படுகொலையைக் கண்டித்து போராடினார்களா? குறைந்தபட்சம் அறிக்கை வெளியிட துப்பிருந்ததா? இவர்கள் தலித் மக்கள் இறந்தால் மட்டும் வாயே திறப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் அடுத்த தேர்தலுக்கும் அனைவரும் நம் ஓட்டை நக்கிப் பொறுக்க வருகின்றனர். அம்பேத்கரின் காலந்தொட்டே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுவதுதான் காங்கிரஸ் கட்சியின் துரோக வரலாறு. இன்று கக்கன் நூற்றாண்டு விழா நடத்தி ‘தலித் மக்களே, எங்கள் கட்சியில் அணி சேருங்கள்’ என்கிறார் பெருமுதலாளிகளின் அடிவருடி ப.சிதம்பரம். மலம் அள்ளுவதும், சாக்கடையைச் சுத்திகரிப்பதும் தலித் மக்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழி என்று நம் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை ஏற்றுக் கொள்ளச் சொன்ன நரேந்திர மோடியின் கட்சி இன்று நம்மையும் சேர்த்துக் கொண்டு, ‘இந்து மாணவர்களுக்கு சலுகை மறுக்கப்படுகிறது, வாருங்கள் போராடுவோம்’ என்கிறது வெட்கமில்லாமல். தமிழ்நாட்டிலோ, கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு சாதிவெறிக்குத் துணை போகின்றனர். வெண்மணி, திண்ணியம், மேலவளவு, சாலரப்பட்டி, கொடியங்குளம், உத்தப்புரம் என்று இன்னும் எத்தனையோ நிகழ்வுகளில் இவர்கள் தலித் மக்களுக்குச் செய்ததனைத்தும் துரோகம் தான். தலித் நிலங்களைப் பறித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறிய ‘சமத்துவ பெரியார்’ தலித் மக்களின் உயிரைப் பறித்தவரின் பெயரை விமான நிலையத்திற்குச் சூட்டுவதாக அறிவித்து, இன்று தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகிறார். இவர்கள் தான் இப்படியென்றால் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரம் பெற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று கூறி ஆட்சி பீடத்திலிருக்கும் மாயாவதி எப்படியொரு சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்தி இருக்கிறார் என்று பாருங்கள். 2007 ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேசத்தில் அவர் ஒரு உத்தரவு பிறப்பிக்கிறார். அதில் தன் ஆட்சியில் காவல் நிலையங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிறைய வழக்குகள் பதியக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். தலித் ஆட்சி செய்யும் நாட்டிலே தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமை நடப்பது வெளியே தெரிந்தால் அடுத்து தனது பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நினைப்பதுதான் காரணம். எனவே, தலித் மக்களுக்கு எதிராக நிற்பதில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் ஒரே கூட்டணியில் நிற்கின்றன. எந்தக் கட்சியும் வாக்குகளைத்தான் பார்க்கின்றன. வாக்களித்தவர்களைப் பார்ப்பதில்லை. அரசும் அதன் அடக்குமுறை இயந்திரங்களான காவல்துறை, நீதித்துறை, ஊடகம் என அனைத்தும் உழைக்கும் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் எதிராகத்தான் நிற்கின்றன. இங்கே ஒரு தலித், ஊராட்சி மன்றத் தலைவராக இருக்க ஆயுதமேந்திய பாதுகாப்பு தேவைப்படுகிறது. செத்த பிறகு இடுகாட்டிற்கு எந்தப் பாதையில் பிணத்தை எடுத்துக் கொண்டு போவது என்ற முரண்பாட்டால் இங்கே பலர் செத்துப் போக நேர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை நடைபெறும் சாதி வெறியாட்டம், முதலில் நம் காலை இறுகப் பிடித்த போது, நாம் கண்டுகொள்ளவில்லை, நம் இடுப்பை முறுக்கியபோது அலட்சியமாக இருந்தோம். இன்று அது நம் கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கிறது. ஒன்று நாம் சாக வேண்டும். இல்லையென்றால் நம்மை நெரித்துக் கொண்டிருக்கும் சாதி வெறியின் கரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். ஆனந்த் தெல்தும்டே என்ற மராட்டியத்தின் மார்க்சிய தலித்திய ஆய்வாளர் கயர்லாஞ்சிப் படுகொலை பற்றி கூறும்போது, இதுபோன்ற படுகொலைகளுக்கு நீதிமன்றத்தால் சமநீதி தரமுடியாது. மக்களே எழுதுவதுதான் தீர்ப்பு. நம்மைப் பலியிடும் சாதிவெறியைப் பலியிடுவது, வன்கொடுமைக்கு எதிரான வன்கொடுமை - இதுதான் தீர்வு என்கிறார். வெண்மணியில் 44 பேரை எரித்துக் கொன்ற மனிதமுகம் கொண்ட பண்ணை முதலை அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றை இன்று சாதி வெறியர்கள் மறந்துவிட்டனர். ‘வரலாற்றை மறந்தால் அது மீண்டும் நிகழ்ந்தே தீரும்’ என்று சொல்வார்கள். எனவே வரலாற்றை மறந்தவர்களுக்கு அதை ஞாபகப்படுத்துவோம். அவர்களை ஒடுக்குவதற்கல்ல, இனியும் ஒரு கயர்லாஞ்சி நடவாமலிருக்க. -

3.சௌதார் குள உரிமைப் போராட்டம்

சௌதார் குள உரிமைப் போராட்டம்: தெரியுமா உங்களுக்கு..?
'எதிரிகள் மழையாய்ப் பொழிந்த கற்களால் காயமடைந்து விட்டபோதிலும், மயக்கம் போட்டுப் பலர் வீழ்ந்ததைக் கண்ட போதிலும், மாநாட்டுப் பிரதிநிதிகள் எதிர்த்துத் தாக்கவில்லை. தலைவரின் கட்டளையைத் தலைமேல் தாங்கி அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அனைவரும் அமைதி காத்தனர். தங்கள் உயிருக்கு ஆபத்தாயினும் கவலைப்படாமல் பொறுமை என்னும் உரைகல்லில் உரசப்பட்டுத் தாங்கள் உண்மையான அகிம்சாவாதிகள் என்று நிரூபித்துக்காட்டினர். அவர்கள் எதிரிகளைத் தாக்கியிருந்தால் மிகப் பெரிய கேடு நேர்ந்திருக்கும். அம்பேத்கர் திறமையான அணுகுமுறையால் சமூக அமைதிக்குப் பங்கம் வராமல் காத்தார். தனது லட்சியத்தில் வெற்றி பெற்றார்” என்று டாக்டர் வசந்த மூன் பாராட்டி எழுதினார்.
அந்தப் போராட்டத்தை அம்பேத்கர் கையாண்ட விதமும் வெற்றிபெற்ற விதமும் தனித்துவம்மிக்கது. அவரின் தலைமைப் பண்புக்கு சாட்சியாகத் திகழ்வதாகும். “மகாட் சௌதார் குளப் போராட்டம்” என்றழைக்கப்படும். அப் போராட்டம் தலித் மக்களிடையே நம்பிக்கை யையும் எழுச்சியையும் விதைத்ததாகும்.
1923 ஆகஸ்ட் 4ஆம் நாள் அன்றைய பம்பாய் சட்டமன்றத்தில் எஸ்.கே. போலே ஒரு தீர்மானம் கொண்டுவர அது நிறைவேற்றப்பட்டது. ஆறு, குளம் முதலிய நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், நீதிமன்றம், பள்ளிக் கூடம், மருத்துவமனை போன்ற பொது இடங்களில் நுழைவதற்கும் தலித்துகளுக்கு எந்தத் தடையுமில்லை. தடுக்கவும் கூடாது என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் சாரம்.
அதாவது 1923 வரை ஆறு, குளம், நீர்நிலை, நீதிமன்றம், பள்ளி, மருத்துவமனை எங்கும் தலித்துகள் நுழையவும் உரிமையற்றிருந்தனர். இந்தத் தீர்மானம் சட்டப்படி உரிமை வழங்கியது. ஆனால் நடைமுறையில் அமலாகவில்லை. சாதி ஆதிக்க இந்துக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
1924ஆம் ஆண்டு மகாட் நகரசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது; “இந்தக்குளம் பொதுக்குளமாகும். இந்தத் தண்ணீரைத் தீண்டத் தகாதவர்கள் உட்பட அனைத்து மக்களும் சுதந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்”. தீர்மானம் உரிமை தந்தது. ஆயினும் சாதி வெறியர் தடையாக நின்றனர்.
இந்நிலையில், 1927 மார்ச் 19ஆம் நாள் மகாட் நகரின் தீண்டப்படாதவர்களின் மாநாடு தொடங்கியது. மகாராஷ்டிரம், குஜராத், மாநிலங்களிலி ருந்து 5000 பேர் வந்து குழுமினர். மாநாட்டின் இரண்டாம் நாள் சௌதார் குளத்தில் தீண்டத்தகாதவர் நீர் எடுத்துக் கொள்ளலாம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்; செயலில் இறங்கவும் முடிவெடுத்து களத்தில் இறங்கினர். அம்பேத்கர் தலைமையில் 5000 தலித்துகள் உற்சாகமாய் அணிவகுத்துச் சென்று சௌதார் குளத்தில் இறங்கினர். தங்கள் இரண்டு கைகளால் நீரை அள்ளிக்குடித்தனர். மகிழ்ச்சிக் கூத்தாடினர். வெற்றிப் பெருமிதம் ஒவ்வொருவர் விழியிலும் மின்னியது. பொறுக்குமோ ஆதிக்க சாதிவெறியர்களுக்கு; இந்துக்களுக்கு ஆபத்து வீரேசுவரர் கோயிலில் தலித்துகள் நுழைந்துவிட்டனர் என வதந்தி பரப்பினர். மாநாடு முடிவுறும் தருணம். ஒரு பகுதியினர்வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இன்னொரு பகுதியினர் ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிறு பகுதியினர் உணவருந்திக் கொண்டிருந்தனர். சாதி வெறியினர் கட்டை, கம்புகளுடன் மாநாட்டுப் பந்தலில் புகுந்து தாக்கினர். வழியில் கண்ட தலித்துகளைத் தாக்கினர். எங்கும் காயம்பட்டோர் வேதனைக் குரல் கேட்டது. தலித்துகள் வீரத்துக்கு சளைத்தவர்கள் அல்லர். ஆயினும் அம்பேத்கரின் கட்டளை அவர்களைக் கட்டிப்போட்டது. அவர் உரக்கப் பேசினார், “இந்தச் சமயம் சுய கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். உங்கள் கைகளைத் தாக்குவதற்காக உயர்த்திவிடாதீர்கள். கோபத்தை உள்ளேயே விழுங்கிவிடுங்கள். மனதை அமைதியாக வைத்திருங்கள். நாம் திருப்பித் தாக்கக்கூடாது. நாம் அவர்களின் தாக்கு தலைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பழமைவாதிகளுக்கு நாம் அகிம்சையின் வலிமையை அறிமுகப்படுத்த வேண்டும்” தலைவரின் கட்டளையை ஏற்று தொண்டர்கள் அடி தாங்கினர். அமைதிகாத்தனர். வழக்கம் போல் காவல்துறை தாமதமாக வந்தது. சற்று அமைதி திரும்பியது. அம்பேத்கர் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், போக்கிரிகள் மீது வழக்கு தொடுக்கவும் முன்நின்று ஏற்பாடு செய்தார். பார்ப்பன சமூகத்தினர் பெருமாள் கோயிலில் கூடி ஆலோசித்தனர். சௌதார் குளத்தை சுத்தம் செய்ய முடிவெடுத்தனர். அதாவது 108 குடம் தண்ணீரில் பசு மூத்திரத்தையும், சாணியையும் கரைத்து, மந்திரங்கள் ஓதி குளத்தில் கலந்தனர். மனிதன் கைகளால் அள்ளிக்குடித்த தால் அசுத்தமானதாம். மாட்டு மூத்திரமும் சாணியையும் கரைத்தால் சுத்தமாகிவிடுமாம். எப்படி இருக்கிறது. சாதிவெறியும் மூடத்தனமும். மறுபக்கம் தங்கள் செல்வாக்கை காட்ட ஊர்வலமும் இயக்கங்களும் நடத்தினர். இதன் எதிரொலியாக மகாட் நகரசபை சௌதார் குளம் பொதுவானது என்ற தன் முந்தைய தீர்மானத்தை ரத்து செய்து விட்டது. மேல்சாதி வெறியர்களுக்கு பணிந்துவிட்டது. “மனிதனுக்காக மதமா? அல்லது மதத்துக்காக மனிதனா? தீண்டப்படாதவர் எனப்படும் நாம் இந்து மதத்தின் ஓர் அங்கமா? இல்லையா? இந்த கேள்விகளுக்கு நாம் ஓர் இறுதி முடிவு எடுத்தாக வேண்டும்” என்று முழங்கி மீண்டும் சௌதார் குளம் இறங்கும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். (அம்பேத்கர் மனதில் துளிர்விட்ட கேள்வி இறுதியில் அவரை தன் சகாக்களுடன் பௌத்த மதம் தழுவச் செய்தது). நீதிமன்றம் அம்பேத்கர், சிவதர்கர் என இருவர் மீது தடை உத்தரவு பிறப்பித்தது. மாநாடு நடத்த இந்து சாதி வெறியர்கள் இடம் தர மறுத் தனர். இறுதியில் முகமதியர் ஒருவர் கொடுத்த வயல்வெளியில் போராட்ட மாநாடு கூடியது. மாநாட்டிற்காக மகாட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள தஸ்காம் துறைமுகத்தை அம்பேத்கர் அடைந்தார். சுமார் 3000 தலித்துகள் உற்காகம் கொப்பளிக்க வரவேற்றனர். நீதிமன்ற கடிதம் ஒன்றை ஒரு பணியாள் அவரிடம் தந்தார். அதன்படி அவர் நீதிபதியைச் சந்தித்துப் பேசினார். நீதிபதி போராட்டத்தை தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார். மாநாடு துவங்கியது அம்பேத்கர் பேசினார்; “நாம் சௌதார் குளத்திலிருந்து நீர் பருகாவிடில் உயிர் போய்விடும் என்ற பிரச்சனை இல்லை. ஆனால் இவ்வாறு செய்வதற்கான அவசியம் என்னவென்றால் இதன் மூலம் தலித்துகளாகிய நாமும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தாம் என்பதை நிலைநாட்ட விரும்புகிறோம். இந்தக் கூட்டம் சமூக சமத்துவத்துக்கு பிள்ளையார் சுழிபோட நடத்தப்படுகிறது. அத்தகைய நோக்கம் கொண்ட இயக்கத்திற்கே இங்கே பந்தக்கால் நாட்ட விரும்புகிறோம்..” அவர்தம் நெடிய உரையில் வரலாறு நெடுக இருந்து அக்னி விதைகளை தேடி எடுத்து விதைத்தார். மனுநீதி சாஸ்திரத்தை தீயிட்டுப் பொசுக்கவும்; சௌதார் குளத்தில் நீரெடுக்கவும் தீர்மானங்கள் நிறைவேறின. 4000 தொண்டர்கள் எதற்கும் தயாராக தங்கள் பெயரைப் போராட்டத்துக்கு பதிவு செய்தனர். மாவட்ட நீதிபதி மாநாட்டு இடத்துக்கே வந்து தடை உத்தரவு பற்றி எடுத்துக் கூறினார். 1927 டிசம்பர் 27 காலை மாநாடு கூடியதும் அம்பேத்கர் கூறினார். “இந்த போராட்டம் இந்து சமூகத்தின் அடக்குமுறை போக்கை எதிர்த்தே நடை பெறுகின்றது. அல்லாமல் அரசாங்கத்தை எதிர்த்து அல்ல. ஆகவே போராட்டத்திற்குத் தடையும் குள உரிமை பற்றிய வழக்கும் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் நாம் அரசாங்கத்தை நம் எதிரியாக்கிக்கொண்டு நம் சக்தியை வீணாக் கக்கூடாது. எனவே நமது இந்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகின்றது. நாம் போராட்டத்தை நிறுத்திவிட்டோம் என்று இதற்கு அர்த்தமில்லை. நமது போராட்டம் முடியவில்லை, தொடர்கிறது. அம்பேத்கரின் அறிவிப்பால் கூட்டம் திகைத்தது. வாயடைத்து நின்றது. ஆயினும் அம்பேத்கரின் மீதுள்ள ஈர்ப்பும் நம்பிக்கையும் அவர்களை இம்முடிவுக்கு கட்டுப்பட்டு அமைதி காக்கச் செய்தன. அம்பேத்கர் 1928 ஜனவரி முதல் நாள் நகரசபைத் தலைவருடன் குளத்தைச் சுற்றிப் பார்த்தார். தென்கிழக்கு மூலையில் புதைக்கப்பட்ட ஒரு கல்லில் மகாட் நகரசபை 1899 என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். தென்மேற்கில் புதைக்கப்பட்ட கல்லின் எழுத்துக்களை சமீபத்தில் உளியால் கொத்தி சீர்குலைத்திருப்பதைக் கண்டார். இதன் மூலம் இக்குளம் தனியாருக்கு சொந்தமல்ல. நகர சபைக்கு சொந்தம், பொதுவா னது என்பதை உறுதி செய்து கொண்டார். மாநாட்டிற்குப் பிறகும் சுற்றிலுமுள்ள கிராமங்களில் தலித்துகள் மீது மேல்சாதி வெறியர்கள் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. அம்பேத்கர் ஒரு புறம் தம் மக்களை அமைதிப்படுத்திக்கொண்டே, நீதிமன்றத்தில் தானே முன் நின்று வழக்கை நடத்தினார். வாதாடினார்; பிப்ரவரி 23ம் தேதி இவர்கள் மீதான தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. குள உரிமை வழக்கு மூன்றாண்டுகள் நடந்தது. இறுதியில் அது பொதுக்குளம், அனைவருக்கும் உரியது என்று தீர்ப்பாகியது. அன்று அம்பேத்கரும் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் சரித்திரம் மோசமான இரத்தக் களறியைச் சந்தித்திருக்கும். அம்பேத்கரின் ஆற்றல்மிக்க தலைமையும், வழிகாட்டலும் அந்த மக்களை ஒரு புறம் எழுச்சி பெறச் செய்தது; மறுபுறம் பட்டாளச் சிப்பாய்களைப் போல கட்டுப்பாடான ராணுவம் போல் ஆக்கியது. இறுதியில் வெற்றியும் தேடித் தந்தது. அவர் தன்னேரில்லாத் தலைவராக திகழ்ந்தார்.

4.கோயில் நுழைவு ஊர்வலம்!

‘பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
-அம்பேத்கர்
நாசிக் நகரமே நடுங்கியது. ஜில்லா மாஜிஸ்திரேட், போலீஸ் சூப்பிரன்டெண்டென்ட் உட்பட எண்ணற்ற அதிகாரிகளும் காவலர்களும் கோயிலின் அடைக்கப்பட்ட கதவுகளின் முன் வந்து குவிந்தனர். இத்தனை களேபரத்துக்கும் காரணம், தாழ்த்தப்பட்டோரின் கோயில் நுழைவு ஊர்வலம்!
அம்பேத்கரின் தலைமையில், வரிசைக்கு நான்கு பேராக கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் மிகவும் அமைதியான முறையில் நகரின் மையத்தில் இருந்த காலாராம் கோயிலை நோக்கி ஊர்வலமாக நடந்து வந்தனர். ஊர்வலம் கோயிலை நெருங்க நெருங்க, நிர்வாகிகளுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் குலைநடுக்கம். எங்கே பெரும் கலவரம் வெடிக்கப்போகிறதோ எனக் கால்கள் வெடவெடக்கக் காத்திருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு!
கோயிலை அடைந்ததும், ஊர்வலத்தினரைக் கோயிலின் நான்கு புறமும் மூடப்பட்டுக்கிடந்த கதவுகளின் முன் அமைதியாக உட்காரும்படி கட்டளையிட்டார் அம்பேத்கர். தலைவனின் கட்டளைக்கு எட்டாயிரம் தலைகளும் கட்டுப்பட்டன. நேரம் கடந்ததே ஒழிய, கதவுகள் திறக்கவே இல்லை. இரவானதும் கூட்டம் களைத்துப்போய் கிளம்பிவிடும், போராட்டம் பிசுபிசுத்துவிடும் என கோயில் நிர்வா கத்தினர் நினைத்தனர்.
ஆனால், இரவு கடந்து மறுநாள் விடிந்த பிறகும் குழுவினர் அப்படியே அமர்ந்திருக்க, கோயில் வாசலும் அடைபட்டுக்கிடந்தது. அடுத்த நாள் காலை, அடுத்த நாள் காலை என ஒவ்வொரு நாளும் நாசிக் நகரத்தின் இந்த வேடிக்கையை ரசித்தபடி, சூரியன் கிழக்கு மேற்காக நகர்ந்துகொண்டு இருந்தான். இன்று எப்படியும் கலவரம் நடக்கும் எனப் பயந்து நடுங்கிய படி ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தவிக்க, போராட்டக் குழுவினர் உறுதியாக அமர்ந்திருந்தனர். தேர்த் திருவிழாவுக்கான நாளும் நெருங்கி வந்தது.
அன்று ஏப்ரல் 8. மறுநாள் ராமர் தேரில் ஊர்வலம் வந்தே ஆக வேண்டும். கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டால்தான், ராமர் வெளியில் வந்து தேரில் அமர முடியும். இக்கட்டான சூழலில் வேறு வழி தெரியாமல், கோயில் நிர்வாகத்தினர் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் எங்களுடன் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து தேரை இழுக்கட்டும் என வழிக்கு வந்தனர்.
அவர்களின் சதித் திட்டம் அறியாத அம்பேத்கர் சம்மதித்தார். ஒரு மாதமாக அடைக்கப்பட்ட கதவுகள் திறந்தன. மறுநாள் தேரை இழுக்கச் சென்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். அறிவித்த நேரத்துக்கு முன்னதாகவே அவசர அவசரமாக கோயில் நிர்வாகத்தினரும், பிராமணர்களும், இதர சாதி இந்துக்களும் கூட்டு சேர்ந்து, தேரை இழுத்துச் சென்றனர். தகவல் தெரியவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவேசத்துடன் தேரை நோக்கி ஓட, போலீஸார் அவர்களைத் தடுத்து விரட்டி அடித்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள், கடவுளின் பேரால் மீண்டும் ஒருமுறை முதுகில் குத்தப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த கலவரங்களின் முற்றுப்புள்ளியாக, பெருஞ்செல்வந்தரான பிர்லா நேரில் வந்து, அம்பேத்கரைச் சந்தித்து, போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதனால் 1935 வரை நாசிக்கின் புகழ்மிக்க அந்தக் கோயில் மூடியே இருந்தது.
தன் சொந்த நாட்டில், தங்கள் மேல் ஒரு மதம் திணிக்கப்பட்டு, அதேசமயம், அதற்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு இழிவு படுத்தப்படுவதை இன்னும் எத்தனை நாள்தான் சகித்துக்கொள்வது எனும் வேதனைகொண்டார் அம்பேத்கர். வெறுமனே காங்கி ரஸின் கொள்கைகளான தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், சமபந்தி உணவு என இவற்றால் மட்டுமே தன் சமூகத்துக்கு விடிவுக்காலம் ஏற்படாது. முறையான அரசியல் வாழ்வுரிமையின் மூலமாகத்தான் எதிர்காலச் சந்ததியினருக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் எனத் தெளிவாக உணர்ந்தார். அதிலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்த உரிமைகளைப் போராடிப் பெற்றால்தான் உண்டு. அவர் களிடமாவது ஒரு பொது நியாயத்தை எதிர்பார்க்கலாம், அவர்கள் போனபின், காலங்காலமாக மதத்தில் ஊறிக்கிடக்கும் உயர் சாதிகள் ஆட்சிக்கு வந்தால், தம் மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது என்ற தெளிவில் இருந்தார். அவரது இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்வது போல் வந்தது… 1930, நவம்பர் 12.
இந்திய வரலாற்றுக்கே திருப்புமுனை நாளாகவும் அமைந்த அந்தப் பொன்னாளில்தான் லண்டனில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இந்தியர்களின் வாழ்வுரிமைக்காக, அரசியலமைப்புச் சட்டங்களில் ஓரளவு சீர்திருத்தத்தை மேற்கொள்வது மாநாட்டை நடத்திய பிரிட்டிஷ் ஆட்சியரின் நோக்கம். காந்தியின் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் பேரியக்கம், தீவிரமாக ஒத்துழையாமை இயக்கத்தைக் கடைப்பிடித்துவந்ததால், இந்த மாநாட்டுக்கான அழைப்பைப் புறக்கணித்தனர். காந்தியும் நிராகரித்தார். ஆனால், அம்பேத்கர் தனது மக்க ளுக்கான நியாயமான வாழ்வுரிமைகளை யும் அரசியல் சமத்துவத்தையும் பெற இது சரியான சந்தர்ப்பம் என அழைப்பை ஏற்று லண்டனுக்கு விரைந்தார். அம்பேத்கருடன் சாப்ரூ, ஜெயகர், மூஞ்சே, சென்னையைச் சேர்ந்த ரெட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட பிரமுகர்களும் பல்வேறு சமஸ்தான மன்னர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரின் மேல் மட்டும் கடும் கோபம்கொண்டனர். இந்தியாவுக்கு துரோகம் இழைக்கும்விதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியினருடன் கூட்டு சேர்ந்துவிட்டதாகத் தூற்றினர். சுபாஷ் சந்திரபோஸ§ம் கடுமையாக விமர்சித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அம்பேத்கர் அந்த வலிகளைத் தன் நெஞ்சில் தாங்கியவராக, மாநாடு நடைபெற்ற செயின்ட் ஜேம்ஸ் அரண்மனைக்குள் அடியெடுத்துவைத்தார்.
மதத்தின் பேரால் அடிமைகளாக்கப்பட்டு, அவமான இருட்டில் வாழும் ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் குரல்கள் அவர் மனசுக்குள் ஒருசேர ஒரு சொல்லைக் கூவின. அது… ‘விடுதலை’!

5.குருஞ்சாக்குளம் படுகொலை(16/03/1992)

குருஞ்சாக்குளம் இந்த பெயரை தமிழக மக்களுக்கு நினைவில்லாமல் போயிருக்கலாம். ஆனால், கோவில்பட்டி, சங்கரன்கோயில் சுற்றுவட்டார தலித் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1992 மார்ச் 16 -ல் இரவு சினிமா பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர்களை, நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 23 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து அவர்களின் ஆணுறுப்பை அறுத்து அவர்களின் வாயில் திணித்துவிட்டுச் சென்ற கொடூரமான நிகழ்வு நடந்தது குருஞ்சாக்குளத்தில்தான்.
இந்த படுகொலை வழக்கு நீதிமன்றத்தில் சரியான சாட்சிகள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டுபிக்காமலேயே வழக்கைத் தூக்கி பரணில் போட்டுவிட்டது.
1.சர்க்கரை,
2.சுப்பையா,
3.அம்பிகாபதி,
4.அன்பு (அன்பு திருவிழாவுக்காக எஸ்டேட்டிலிருந்து குருஞ்சாக்குளத்திற்கு வந்தவர்)
இந்த 4 தலித்துகளும் இப்படி கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிற அளவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள். குருஞ்சாக்குளத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஆதிக்க சாதியினர் நாயக்கர்கள்தான். ஊருக்கு பக்கத்திலேயே தலித் குடியிருப்புகள். தலித் மக்கள் தங்களின் சாமியான காந்தாரி அம்மனுக்கு கோயில் கட்ட முடிவு செய்து கோயில் கட்டடத்தை எழுப்புகிறார்கள்.காந்தாரியம்மன் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து எதிர்புறத்தில் நாயக்கர்கள் சமூகத்தின் மண்டபம் அமைந்திருக்கிறது. தலித்துகளின் கோயில் நாயக்கர்களின் மண்டபத்திற்கு எதிரே கட்டுவதா என்று நாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த இடம் குருஞ்சாக்குளம் தலித்மக்கள் பகுதியில் இருக்கும் அரசு நிலம். இவர்களுடைய ஒரே பிரச்சினை தலித்துகளின் சாமியே ஆனாலும் நாயக்கர்களின் மண்டபத்திற்கு எதிரே எழுந்துவிடக்கூடாது என்பதுதான். அங்கேதான் கோயில் கட்டுவோம் என்று எதிர்க்குரல் எழுப்பிய சர்க்கரை சுயமரியாதை மிக்கவராக இருந்தது நாயக்கர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. சர்க்கரையையும் அவருக்கு துணையாக இருப்பவர்களையும் கொன்றால்தான் இந்த ஊர் தலித்துகள் அடங்குவார்கள். என்று திட்டம்போட்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார்கள். படுகொலை செய்தவர்களை காவல்துறை கைதுசெய்த போது குருஞ்சாக்குளம் நாயக்கர்கள் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள்.அதில் முக்கியமானவர்கள் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன். இந்த வழக்கை நாயக்கர்கள் தரப்பிலிருந்து நடத்தியவர் அன்றைக்கு அந்தப் பகுதியில் மதிமுகவில் செல்வாக்கு பெற்றிருந்த ராதாகிருஷ்ணன். இவர் இப்போது திமுகவில் மாநில செய்தித்தொடர்பாளராக இருக்கிறார். கோவில்பட்டி, சங்கரன்கோயில் இந்தப்பகுதி முழுவதும் நாயக்கர்களின் ஆதிக்கம்தான். இந்தப் பகுதி ஊர்களில் எந்த இடத்திலும் திமுக, அதிமுக, என எந்தக் கட்சியின் கொடிகளோ, சுவர் விளம்பரங்களோ பார்க்கவே முடியாது.எல்லா இடங்களிலும் மதிமுக கொடியும் வைகோவும்தான். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் பாதுகாப்பாக விடுதலை ஆகிறவரை வைகோ,வைகோவின் தம்பி ரவிச்சந்திரனின் செல்வாக்கு பணம், படை என்று தாராளமாகவே பயன்படுத்தப்பட்டது. எந்த கட்சி ஆட்சி என்றாலும் வைகோ நாயக்கருக்கு இங்கு பெரிய செல்வாக்குதான். அங்கே இவர் பின்னாடி இருப்பவர்கள் இவரின் திராவிட பாரம்பரியம், என்பதற்காகவெல்லாம் இல்லை.இவர் ஒரு நாயக்கர். நாயக்கர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் வைகோவைக் கொண்டாடுகிறார்கள். வைகோவும் நாயக்கராகவே இருக்கிறார்.
இன்றைக்கு குறிஞ்சான் குளத்தில் நாயக்கர்களின் மண்டபத்தை மறைக்கும்படி வீடுகள் எல்லாம் கட்டிவிட்டார்கள். ஆனால், இன்றைக்கும் அன்று காந்தாரியம்மன் கோயில் கட்டுவதற்காக எழுப்பப்பட்ட பீடத்துடன் அதே நிலையில் நிறைவடையாமலேயே நிற்கிறது. 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த கொடூர நிகழ்வை நினைவுகூறக்கூட தயங்குகிறார்கள் குருஞ்சாக்குள தலித்மக்கள்.
அப்பகுதியில் எல்லா நிறுவனங்களும் நாயக்கர்களுடையதுதான்.பெரும்பாலான நிலமும் நாயக்கர்கள் வசம்தான் உள்ளது. நாயக்கர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிற தலித்துகளுக்கு அவர்களின் காடுகளில் வேலை கிடையாது. அவர்களின் நிறுவனங்களில் வேலை கிடையாது.வேறுவழியில்லாமல் தலித் மக்கள் நாயக்கர்களின் ஆதிக்கத்திற்கு அடங்கிப்போக வேண்டியிருக்கிறது. இந்த ஆதிக்க சாதிவெறி நாயக்கர்களின் நாயகனாக இருப்பவர்தான் வைகோ. இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே ஒரு ஒற்றுமைதான் இருக்கிறது. அது சாதியம். அந்த சாதியம் மாநிலத்திற்கு மாநிலம், வட்டாரத்திற்கு வட்டாரம் அதன் தன்மைகள், சிக்கல்கள் மட்டுமே மாறுபட்டிருக்கிறது. வட தமிழகத்தைவிட தென் தமிழகம் சாதிய அமைப்பிலும் ஒடுக்குகிற ஆதிக்க சாதியினரின் தன்மையும் ஒடுக்கப்படுகிற தலித்துகளின் எதிர்ப்புத் தன்மையிலும் மாறுபட்டதாக மிகவும் இறுக்கமானதாகத்தான் இருக்கிறது. தென் தமிழகத்தில் ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்கத்தை தலித்கள் யார் எதிர்த்தாலும் அவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இப்படி உரிமைக்குரல் எழுப்புபவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் அங்கே மற்றவர்கள் யாரும் எதிர்த்து குரல் எழுப்ப முடியாதபடி அச்சுறுத்தப்படுகிறார்கள். அப்பகுதியில் மீண்டும் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு எதிர்க்குரல் எழ ஒரு தலைமுறையாகிவிடுகிறது.
ஆதிக்க நாயக்க சாதிவெறியைத் தூபம்போட்டு அனையாமல் மதிமுக என்ற பெயரில் அரசியலாக காத்துவருகிறார்கள் சங்கரன் கோயில் வட்டார நாயக்கர்கள். ஆதிக்க சாதிவெறி நாயக்கர்கள் செல்வாக்கு கறையை மறைக்கத்தான் வையாபுரி கோபாலசாமி நாயக்கருக்கு ஈழத்தமிழர் அரசியலும்,திராவிட அரசியலும், தமிழின அரசியலும் தேவைப்படுகிறது.
இப்போது வையாபுரி கோபாலசாமி நாயக்கர் சாதிவெறி ராமதாஸோடும் மதவெறி பாஜகவோடும் சரியாகத்தான் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இந்து மதவெறியும் சாதிவெறியும் இரண்டறக் கலந்த ஒன்றுதான். வைகோவின் சாயம் வெளுத்துவிட்டது. வைகோ மீது அவருடைய நாயக்க ஆதிக்க சாதிவெறி செல்வாக்கை சுட்டிக்காட்டும் போதெல்லாம் கொதித்துவிடுகிறார்கள் மதிமுககாரர்கள். ஆனால், இப்பகுதிகளில் சென்று விசாரித்தால் தெரியும் வைகோ வையாபுரி கோபாலசாமி நாயக்கராக வீற்றிருப்பது.
குருஞ்சாக்குளம் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் சர்க்கரையை யாரும் மறந்துவிடவில்லை. அதே போல படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றிய வைகோ, வைகோவின் தம்பி ரவிச்சந்திரன்,ராதாகிருஷ்ணன் இவர்களையும் மறந்துவிடவில்லை. வரலாறு எல்லாவற்றையும் அழிக்க முடியாத எழுத்துகளால் எழுதிவைத்துக்கொள்கிறது
CLICK

மாவீரன் மேலவளவு முருகேசன்
30.6.1997

வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டுமெனக் கூறியது. அதனடிப்படையில் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத் தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிப் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது.

இதுநாள் வரை தங்களுக்கு கீழே இருந்த தலித்துகள் தங்களுக்கு மேலே வந்துவிடுவார்களோ என்று, ஒரு தலித்தை தலைவராக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலிருந்த ஆதிக்க சாதியினர், இது குறித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இருப்பினும், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள தலித் மக்கள் ஆர்வம் காட்டினர். தி.மு.க.வைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் 10.9.1996 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் அவர்களை மிரட்டவே, அவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

மேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், ஆதிக்க சாதியினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். அச்சத்தால் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 28.12.96 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலை தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்க சாதியினர் இத்தேர்தலைப் புறக்கணிக்க, தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து, இறுதியில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆதிக்க சமூகத்தினர் முருகேசனுடன் தந்திரமாகப் பழகி, ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். முதன்முறையாக 10.9.1996 அன்று முருகேசனும் மற்ற தலித் மக்களும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தலித் மக்களின் மூன்று குடிசைகளுக்கு தீ வைத்தனர் ஆதிக்க சாதியினர். முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வந்தபிறகு தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.

இது குறித்து நிவாரணம் கோரி 30.6.1997அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர்.

மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைபாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.

பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.

25.9.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல்துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப்பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்ததால், கைதானவர்களை பிணையில் தவிர்க்க முடியாமல் விடுவித்தாக வேண்டும் என்பது சட்டவிதி). குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.

1998 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் பெரும்பான்மையினருக்குப் பிணை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலவளவிற்குத் திரும்பியதால், தலித் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வாக்குள்ள முக்கியமான ஓரிருவர் சம்பவ சாட்சிகளான தலித் மக்கள் சிலரிடம் மறைமுக மிரட்டலில்ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக இது குறித்து அவர்களால் நேரடியாக ஒன்றும் செய்ய இயலவில்லை. முருகேசனின் தம்பி கருப்பையா இச்சூழ்நிலையை விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்தார். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இத்தகவல்களைக் கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பொ. ரத்தினமும், இக்கட்டுரையாளரும், மற்ற சக வழக்குரைஞர்களும் இச்சூழ்நிலை குறித்துப் பெரும் கவலையடைந்தனர். 1998 ஏப்ரல் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போதிருந்த மன்மோகன் சிங் லிபரான் (பாபர் மசூதி இடிப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தற்பொழுது உள்ளார்) அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கி, இச்சூழலால் வழக்கில் சாட்சிகளாக உள்ள தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 75 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனுவை உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரப்படி நடவடிக்கை எடுக்க, இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் விசாரணைக்கு அம்மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயராம் சவுத்தா மற்றும் பி. பக்தவச்சலு ஆகியோர், மனுதாரர்களான வழக்குரைஞர்கள் வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களோ, அரசோ அல்லர்; அவர்கள் வழக்கிற்கு மூன்றாம் தரப்பினர். எனவே, அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று இவ்வகையில் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று அதிரடித் தீர்ப்பு வழங்கினர்.

இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் பொ. ரத்தினம் (முதலாம் மனுதாரர்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பிணை ரத்து குறித்த குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை ஆய்ந்து அளித்த தீர்ப்பு, மிகவும் முன்னோடித் தீர்ப்பாக இன்று வரை அறியப்படுகிறது. அதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள், “ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை குற்றவியல் வழக்கைத் தொடுத்து நடத்தும் அரசோ அல்லது அவ்வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்றிருந்த நிலையை மாற்றி, வழக்கில் நேரிடையாகத் தொடர்பற்ற ஆனால் அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையில் உண்மையான, நேர்மையான அக்கறையுள்ள நபர்களும் பிணை ரத்து மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் (ரத்தினம்-எதிர்-அரசு (2000) 2SCC 391) சட்ட விளக்கமளித்தது.

இத்தீர்ப்பின் காரணமாக மேலவளவு படுகொலை வழக்கு, சட்டரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததால், இதற்குப் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வட்டாரத்தில் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய வழக்கு என்ற தனிக்கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்னொரு செய்தியையும் இங்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நீதிமன்றத்தை எவ்விதம் அணுகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையும்.

மேலவளவு வழக்கின் விசாரணை மதுரையிலேயே நடத்தப்பட்டால், மதுரை மற்றும் பிற தென்மாவட்டங்களில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆதிக்க சாதியின மக்களே பெரும்பான்மையினராக இருப்பதால், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சியளிக்க பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்துதல், சாட்சிகளை விலை பேசுதல் போன்றவை நிகழ்ந்ததாலும் வழக்கு விசாரணையை வேறு வட மாவட்டத்திற்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு செய்யப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னரே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தது. எனவே, வழக்கு விசாரணை மதுரையிலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

வழக்கு விசாரணையை சேலத்தில் நடத்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞரான நியமனம் செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசு உத்ததரவு ஏதும் பிறப்பிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனுவம் தாக்கல்செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலவளவு வழக்கை நடத்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அவருடன் மற்றொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையை திறமிக்க வகையில் நடத்தினார். பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 26.7.2001 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு நிலுவையிலிருக்கும் காலத்திற்கு தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்கள், முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல் வழங்கியது, மனித உரிமை மற்றும் தலித் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

வரலாற்றில் இன்று...

மறக்க முடியுமா?

சென்னகரம்பட்டிப் படுகொலை நினைவு நாள்

           05-07-1992

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு அருகிலேயே அமைந்துள்ளது
சென்னகரம்பட்டி என்னும் இந்தக் கிராமம்.

 சென்னகரம்பட்டியில் அம்மச்சியம்மன் கோயில் நிலங்களை தலித்துகள்
குத்தகைக்கு எடுப்பதில் 1992ல் மூண்ட பகை காரணமாக  
இந்தப் படுகொலை நடத்தப்பட்டது.

அறநிலையத் துறையால் பராமரிக்கப்படும் இந்தக் கோவிலுக்குச்
சொந்தமான நிலத்தை குத்தகைக்கு கேட்டார்கள் என்கிற ஒரே
காரணத்திற்காக
இதில் அம்மாசி (வயது 57), வேலு (வயது 35)ஆகிய இரண்டு தலித்துகள்
குரல்வளையை அறுத்து சாதிவெறிக் கும்பலால் படுகொலை
செய்யப்பட்டார்கள்.

30.6.1997 அன்று பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு
தலித்துகளை மேலவளவில் கொன்றார்களே ஆதிக்கச் சாதி வெறியர்கள்
அந்தச் சம்பவம் நடந்த அதே இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் (500 மீட்டர்)
தொலைவிலேயே இந்தப் படுகொலை நடத்தப்பட்டது.

அதன் நினைவு நாள் இன்று...

வீரவணக்கம் செலுத்துவோம்...

புரட்சிகர வீரவணக்கம்...

முருகானந்தம் குமார், நெய்வேலி, (பனங்குடி).
*****************************

No comments:

Post a Comment